பெங்களுரூ: இந்தியா டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ-விற்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய போட்டி இருக்கும் என்பதை முன்கூட்டிய அறிந்த ஏர்டெல் நிறுவனம், இன்று சந்தையில் அறிமுகமான ஜியோவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்கிற்கு விலைபோரை துவக்கிய நிலையில், ஏர்டெல் நிறுவனம் டேட்டா ஸ்பீடு போட்டியை சந்தையில் கிளப்பிவிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ-வின் வியாழக்கிழமை என்ற விஷயத்தை அறிந்த ஏர்டெல் நிறுவனம், தன்னிடம் இருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டு, புதன்கிழமை மாலையிலேயே தனது இணைய தளத்தில் புதிய அறிவிப்பை விட்டுள்ளது.
எப்படி என்ன அறிவிப்பு..?
மும்பை மற்றும் கேரளா
புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, மும்பை மற்றும் கேரளா வட்டங்களில் இருக்கும் தனது அனைத்து அலைக்கற்றைகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய பேண்டில் 4ஜி சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது 4ஜி சேவையை விடவும் அதிகவேகமானதாகும். இப்பகுதியில் இருக்கும் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக 135Mbps வேகத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
40-80% அதிகம்
135Mbps வேகம் என்பது ஜியோ-வின் அதிகப்பட்ச இணைய வேக சேவை விடவும் சுமார் 40-80 சதவீதம் அதிகமாகும்.
ஜியோ
இத்தகைய மேம்பட்ட சேவையை அளிப்பதில் தான் ஏர்டெல் முன்னிலையில் இருப்பதாக நினைக்கிறது. ஆனால் உண்மையில் இத்தகைய சேவை மும்பை மற்றும் கேரளா வட்டங்களில் மட்டும் தான். இதனால் ஜியோ விற்கு எவ்விதமான பாதிப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சோதனை சேவை
ஜியோ நிறுவனத்தின் சோதனை சேவையில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் சுமார் 80-90Mbps இணைய வேக சேவையை அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைக்கப்பட்ட சேவை
இத்தகைய அதிகவே சேவையை தனது மொத்த அலைக்கற்றை இணைப்பதன் மூலம் மட்டுமே அளிக்க முடியும். இதனால் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ முயற்சி
இதேபோன்ற ஒருங்கிணைக்கப்பட்ட சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க ரிலையன்ஸ் ஜியோ முயற்சி செய்து வருகிறது.
அலைக்கற்றை பற்றாக்குறை
தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் ஜியோவிடம் அதிகளவில் இருப்பது 4ஜி அலைக்கற்றைகள் தான். அடுத்து வரும் ஸ்பெக்டரம் ஏலத்தில் 2ஜி மற்றும் 3ஜி வாங்குவதற்காக மிகப்பெரிய தொகையை ஜியோ முதலீடு செய்யும் இது மட்டும் அல்லாமல் ஏலத்தில் ஏர்டெல் உடனான போட்டி வசூலை விண்ணை முட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications