டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பல திட்டங்களில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது இந்தியாவில் புதிதாக உருவாக்கப்படும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் திட்டம் தான். இதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
பிரதமர் மோடி 2 வருடத்திற்கு முன் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே நகரமயமாக்கப்படும் என மக்களின் கனவு நிறைவேறாது எனத் தெரிகிறது..?!
100 ஸ்மார்ட்சிட்டி
இந்தியா முழுவதையும் நகரமயமாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் முடிவில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் புதிதாக 100 ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது.
என்ன பயன்
100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் திட்டம் அறிவித்து 2 வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையில், இத்திட்டத்திற்கு அன்னிய முதலீடாக ஒரு ரூபாய் கூடக் கிடைக்கவில்லை எனத் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிவந்துள்ளது.
பிரதமர் நாடுநாடாகச் சுற்றியும் 1 டாலர் கூடப் பெற முடியவில்லை என்றால் என்ன பயன்.?!
வெங்கையநாயடு
இத்திட்டத்திற்குப் பிரதமர் தனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் புதிய முதலீடுகளைத் திரட்ட போராடி வரும் சூழ்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கையநாயடு-ம் பல நாடுகளுக்குச் சென்று 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக முதலீட்டைத் திரட்டி வருகிறார்.
ஆனால் இதுவரை 1 டாலர் ஏன் 1 ரூபாய் கூட முதலீடு செய்யப்படவில்லை எனத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில்கிடைத்துள்ளது.
அன்னிய முதலீடு
இந்தப் பதிலில் மத்திய அரசு எவ்வளவு அன்னிய முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எவ்விதமான ஆய்வும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் முழுமையான தகவல் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒரு ஸ்மார்ட்சிட்டிக்கு 100 கோடி என்ற விதத்தில் சுமார் 48,000 கோடி ரூபாய் நிதிஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
இத்திட்டத்தை வடிவமைக்கவும், செயல்படுத்தவும் அமெரிக்க வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிரான்ஸ் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுவே இத்திட்ட அறிவிப்புக்குப் பின் நிகழ்ந்த முக்கிய முன்னேற்றமாகும்.


Click it and Unblock the Notifications