2 நாட்களில் ரூ.2 லட்சம் வரை கடன்.. 'பேடிஎம்' வாடிக்கையாளருக்கு சூப்பர் ஆஃபர்..!
பெங்களுரூ: சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் மிகப்பெரிய முதலீட்டில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றுள்ள பேடிஎம் நிறுவனம், அடுத்தச் சில மாதங்களில் தனது வாடிக்கையாளர்களுக்குத் தனிநபர் கடன் (Personal Loan) வழங்கப்போவதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இப்புதிய திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலான கடனை அளிக்கவும், 2 லட்சம் ரூபாய் வரையிலான கடனை 2 நாட்களுக்குள் அளிக்க உள்ளதாகவும் பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணா தெரிவித்தார்.
தற்போது பேடிஎம் நிறுவனம் தனியாகப் பேமெண்ட் வங்கியை உருவாக்கி வரும் நிலையில், இக்கடன் திட்டத்தை 10 வங்கிகளுடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்த முடிவு செய்துள்ளது பேடிஎம் நிர்வாகம்.


Click it and Unblock the Notifications