டெல்லி: பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா அனைத்து டிக்கெட் கட்டணமும் உள்ளடக்கிய சலுகை கட்டணமாக 599 ரூபாய்க்குத் தனது விமான டிக்கெட் விலையை அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை விலையில் செப்டம்பர் 11 வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் இந்த சலுகை விலையில் 2017, பிப்ரவரி 6 முதல் 2017, அக்டோபர் 28 வரை பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
599 ரூபாய் டிக்கெட்
கவுஹாத்தி முதல் இம்பால் செல்ல மட்டுமே 599 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்றும் பெங்களூரூவில் இருந்து கொச்சி செல்ல 899 ரூபாய் என்றும், பெங்களூரூவில் இருந்து கோவா செல்ல 1,099 ரூபாய் என்றும் பெங்களூரூவில் இருந்து விசாகபட்டனம் செல்ல 1,199 ரூபாய் என்றும், பெங்களூரூவில் இருந்து புது டெல்லி செல்ல 2,299 என்றும், பெங்களூரூவில் இருந்து பூனே செல்ல 1,299 ரூபாய் என்றும் டிக்கெட் விலையை அறிவித்துள்ளனர்.
எத்தனை டிக்கெட்கள்
டாடா குழுமம் மற்றும் மலேசியாவின் ஏர் ஏசியா பெர்ஹாட் நிறுவனங்களின் கூட்டணியில் இந்தியாவில் சேவை அளித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் இந்தச் சலுகை ஆஃபர் எத்தனை டிக்கெட்கள் வரை என்று ஏதும் அறிவிக்கவில்லை.
வெளிநாட்டுப் பாதைகள்
இதேப்போன்று சில வெளிநாட்டுப் பாதைகளிலும் சலுகை விலை கட்டணத்தை ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. எடுத்துக்காட்டுக்கு குறைந்தபட்சமாகக் கொச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்ல 3,399 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் இது முன்பதிவு செய்யும் டிக்கெட்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏர் ஏசியா நிறுவனம்
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் தனது சேவையைத் துவங்கிய ஏர் ஏசியா நிறுவனம், மூன்று மாதத்தில் 20.36 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. இதுவே சென்ற வருடம் 44 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. இந்நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் மட்டும் 73 சதவீதம் உயர்ந்து 189 கோடி ரூபாய் வருவாய் பெற்றது.
கூடுதலாக முதலீடு
ஏர் ஏசியா இந்தியாவின் தலைமை பொறுப்பாளர் அமர் அப்ரோல் இது பற்று கூறுகையில் கடந்த மாதம் முதல் ஏர் ஏசியா நிறுவனம் தனது விமான சேவையை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காகக் கூடுதலாக முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?
யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications