இந்தியாவிற்கு புதிய நிதியாண்டு வேண்டுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு இப்போது நடைமுறையில் உள்ள ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான நிதி ஆண்டினை மாற்றுவதற்கான பொதுமக்களிடம் கருத்தைக் கேட்டு வருகிறது.

நிதி ஆண்டை மாற்றுவது பற்றி நிறைய விவாதங்கள் நடந்த வரும் நிலையில் இந்தியாவிற்கு புதிய நிதி ஆண்டு தேவையா..? என்று நாம் இங்குப் பார்ப்போம்.

ஆய்வு செய்ய புதிய குழு

ஆய்வு செய்ய புதிய குழு

இந்தியாவிற்கு புதிய நிதி ஆண்டு தேவையா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது குழு அத்தகையை ஒரு மாற்றத்தினை எப்படிச் செய்வது அதனால் வரக் கூடிய பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்தும் வருகிறது.

வரலாறு

வரலாறு

இப்போது இந்தியாவில் ஏப்ரல்-மார்ச் நிதி ஆண்டைக் கடைப்பிடித்து வருகிறோம். இது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய ஏப்ரல்-மார்ச் நிதி ஆண்டு முறையாகும்.

இதற்கு முன்பு 1867 வரை மே-ஏப்ரல் நிதி ஆண்டு முறையை இந்தியாவில் பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானில் ஜூலை-ஜூன் நிதி ஆண்டினை கடைப்பிடித்து வருகிறோம்.

 

1976-க்கு பிறகு நிதி ஆண்டினை மாற்றிய நாடுகள்

1976-க்கு பிறகு நிதி ஆண்டினை மாற்றிய நாடுகள்

அமெரிக்கா ஜூலை 1 முதல் ஜூன் 30 வரையிலான நிதி ஆண்டு கொள்கையை பின்பற்றுகிறது.

அயர்லாந்து ஏப்ரல் - மார்ச் நிதி ஆண்டு கொள்கையை பின்பற்றி வந்தது, இப்போது ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான நிதி ஆண்டு கொள்கையை கடைப்பிடிக்கிறது.

ஆப்கானிஸ்தான் மார்ச் 21 முதல் 20 வரையிலான நிதி ஆண்டு கொள்கையை கடைப்பிடித்து வந்தது அன்மையில் இதை டிசம்பர் 21 முதல் டிசம்பர் 20 நிதி ஆண்டாக மாற்றியுள்ளது.

 

நிதி ஆண்டை மாற்றுவதற்கான இந்தியாவின் கடைசி முயற்சி

நிதி ஆண்டை மாற்றுவதற்கான இந்தியாவின் கடைசி முயற்சி

கடந்த 1984 மே மாதம் நிதி ஆண்டு மாற்றுவதற்கான முயற்சியை எடுத்த இந்திய அரசு எல்.கே.ஜா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இந்து குழு 1987 முதல் ஜனவரி - டிசம்பர் நிதி ஆண்டினை கடைப்பிடிக்கலாம் என்று ஏப்ரல் 1985 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் நாட்காட்டி நிதி ஆண்டினை கடைப்பிடிக்கலாம் என்றும் முக்கிய காரணியாக பருவமழையைக் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

அரசு மேலும் சிறப்பை எதிர் பார்த்தது

அரசு மேலும் சிறப்பை எதிர் பார்த்தது

பருவமழையை மட்டுமே இந்த மாற்றத்திற்குக் காரணமாக குறிப்பிட்டிருந்த நிலையில் மத்திய அரசு இதைப்பற்றி முடிவை ஏதும் எடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் நிதி ஆண்டில் மாற்றம் செய்ய முயற்சிப்பது தரவு சேகரிப்பை பாதிக்கும். நிதி நடைமுறைகள், வரி சட்டங்கள் மற்றும் அமைப்புகள் விரிவான திருத்தங்களை இது மீண்டும் இணைக்க வேண்டி வரும் அதனால் தான் மற்றம் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூரப்படுகிறது.

 

பொது மக்கள் கருத்தை எதிர்பார்க்கும் மத்திய அரசு

பொது மக்கள் கருத்தை எதிர்பார்க்கும் மத்திய அரசு

நிதி ஆண்டு மற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ள மத்திய அரசு இதற்கான வசதியை mygov.in என்ற இணையதளத்தில் அளித்துள்ளது.

இது பற்றிய உங்கள் கருத்தை 2016, செப்டம்பர் 30 வரை பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

 

பிப்ரவரி கடைசி தேதியில் ஏன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள் தெரியுமா?

பிப்ரவரி கடைசி தேதியில் ஏன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள் தெரியுமா?

இது பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does India need a new financial year?

Does India need a new financial year?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X