ஜப்பான்: ஐபோனில் சூப்பர் மேரியோ ப்ரோஸ் கேம் நிறுவப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்ததை அடுத்து ஜப்பானைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சூப்பர் மேரியோ கேமின் தயாரிப்பு நிறுவனமான நிண்டெண்டோவின் பங்குகள் 18 சதவீதம் வரை கிடு கிடுவென உயர்ந்தன.

மொபைல் கேம் துறையில் ஏற்கனவே ஜப்பான் நிறுவனத்தின் போகிமான் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில் இப்போது சூப்பர் மேரியோ கேம் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆப்பில் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் வரும் டிசம்பர் மாதம் மேரியோ கேம் அறிமுகம் படுத்தப்படும் என்று நிண்டெண்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
இப்போது 40.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் இந்நிறுவனத்தின் மதிப்பு இன்று காலை 13.2 சதவீதம் உயர்வுடன் முடிந்தது. இது கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது இதுவே அதிகமாகும்.

கேண்டி க்ரஷ் சாகா, ஆங்ரி பர்ட்ஸ் மற்றும் போக்கிமான் கேம் வருகையால் 35 வருடமாக விற்பனையில் இருந்து வந்த சூப்பர் மேரியோ கெம் வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்தது.
சூப்பர் மேரியோ கேம் பதிவிறக்க மற்றும் விளையாட கட்டணங்கள் ஏதும் இல்லை என்றும் ஆனால் சில அம்சங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்று நிண்டெண்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் மார்ச் மாதத்திற்குள் அனிமல் க்ராசிங் மற்றும் ஃபைர் எம்பலம் என்று இரண்டு புதிய கேம்களை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications