சென்னை: இந்திய நாணய சந்தையில் பங்குச்சந்தை சரியும் போது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபமாக இருப்பது தங்கம் மீதான முதலீடு தான். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறையத் துவங்கிய முதல் இந்திய சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி தங்கத்தின் மீது முதலீடு குவிந்த வண்ணமாக உள்ளது.
இதன் காரணமாகத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர் உயர்வு நிலையில் உள்ளது.
இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகை தீபாவளி. இப்பண்டிகை காலத்தில் பல தள்ளுபடி சலுகைகள் மூலம் இந்தியா முழுக்க வர்த்தகச் சந்தை உச்சத்தை அடைவதும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நாணய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் அதிகளவில் வாங்கப்படுவது வழக்கம்.

இதனால் இக்காலகட்டத்தில் தங்கம் விலை உச்சத்தை அடைவது இயல்பு.
தற்போது 24 கிரேட் 10 கிராம் தங்கத்தின் விலை 31,500 ரூபாயாக இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்குள் ரூ.32,000 விலையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குச் சாதகமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகவும் குறைவாக உள்ளதால் பெடரல் வங்கி தங்களது வட்டி விகிதத்தை உயர்த்த முடியாது. இதனால் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளும் தங்கம் மீது அதிகளவிலான முதலீடு செய்கிறது.

இந்நிலையில் குறைந்த கால முதலீடா எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்குத் தங்கம் தற்போது சிறந்த தேர்வாக உள்ளது.
இதேவேளையில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் தேவை இந்தியாவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக அனைத்து இந்திய ரத்தினம் மற்றும் நகை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications