சீனாவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஹூருன் ரிப்போர்ட் இன்க். இந்த நிறுவனம் அன்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியதில் இந்தியாவில் வேகமாக வளரும் தொழிலதிபர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் சொத்து மதிப்பு ஒரே வருடத்தில் 162 சதவீதம் உயர்ந்து 40 வயதிற்குள் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 2,824 கோடி ரூபாயில் இருந்து 7,300 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா செய்துள்ள மிகப்பெரிய முதலீடே என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளில் 21 சதவீதம் மட்டுமே இவரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சர்மாவிற்கு அடுத்தபடியாக இண்டிகோ நிறுவனர் ராகேஷ் கங்காவாளின் சொத்து மதிப்பு 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவருடைய சொத்து மதிப்பு 15,900 கோடி என்றும் சென்ற வருடம் ஐபிஓ-வில் இணைந்த பிறகு இந்நிறுவனத்தின் பங்குகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் 30வது இடத்தில் ஓலா நிறுவனத்தின் பாவிஷ் அகர்வால் இருக்கிறார். சென்ற வருடம் இருந்தது 2,385 கோடியாக இருந்த இவருடைய சொத்து மதிப்பு 3,000 கோடியாக உயர்ந்துள்ளது. இவருடைய நிறுவனத்தின் இணை இயக்குநரான அன்கிட் பாட்டியின் நிலையோ தலைகீழாக உள்ளது. சென்ற வருடம் இருவரின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்த நிலையில் இந்த வருடம் 1,600 கோடிக்கும் சற்று அதிகம் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் பெரும் முதலீடுகள் செய்யும் பிரிவைக் கவனித்து வரும் ஹூரூன் ரிப்போர்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அனஸ் ஏ. ஆர். ரகுமான் ஜூனைட் கூறுகையில் இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் இணைதள வணிகங்களில் முதலீடு செய்வது அன்மை காலமாக குறைந்து காணப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதை பெரும் மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுவனங்கள் குறைத்ததே இந்நிறுவனத்தின் மதிப்பு குறைந்ததற்கான காரணம் என்று கூறினார்.
ஒரே வருடத்தில் 162 சதவீதம் உயர்வு
7,300 கோடி சொத்து மதிப்பு
இண்டிகோ நிறுவனர் ராகேஷ் கங்காவாள்
ஓலா நிறுவன தலைவர்
இணை இயக்குநர் அன்கிட் பாட்டி
இ-காமர்ஸ் முதலீடு குறைந்தது
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications