ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ‘முட்டாள்’ தனமாக செயல்படுகிறது: கிஷோர் பியானி ‘ஆவேசம்’

புதிதாகத் துவங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றிய கேள்வியை ஃபூச்சர் குழுமத்தின் தலைமை பொறுப்பாளர் கிஷோர் பியானியிடம் டெல்லியில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்ட போது 90 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முட்டாள் தனமாக செயல்படுகின்றன, அவர்களுடைய நிலைப்பாடுகளில் அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவது இல்லை என்று கூறியுள்ளார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து ஃபூச்சர் குழுமத்தின் தலைமை பொறுப்பாளர் கிஷோர் பியானி கூறிய முழு விவரத்தை இங்குப் பார்ப்போம்.

முட்டாள் தனமாக செயல்படுகின்றன

முட்டாள் தனமாக செயல்படுகின்றன

என்னைப் பொருத்த வரை 90% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முட்டாள் தனமாக செயல்படுகின்றன அவர்கள் துவங்கும் நிறுவனங்களுக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

பல நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட துவங்கி உள்ளனர் உதாரணத்திற்கு டாக்ஸி சேவையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நிறுவனங்களின் வருவாய் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக 3,500 கோடியைக் கூட எட்டவில்லை.

 

விறைப்பதே குறிக்கோள்

விறைப்பதே குறிக்கோள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குபவர்கள் விறைப்பதையே அவர்களது குறிக்கோளாக வைத்துள்ளார்கள். இதுவே பல பெறும் நிறுவனங்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களை வாங்குவதற்கான காரணம், இவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் துவங்கிய பிறகு நெடுந்தூர குறிக்கோள் ஏதும் இல்லாமல் விற்றுவிடுகின்றனர் என்று பியானி கூறினார்.

முதலீட்டாளர்களிடம் 80 சதவீத பங்குகள்

முதலீட்டாளர்களிடம் 80 சதவீத பங்குகள்

தங்களது நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் போது முதலீட்டாளர்களிடம் 80 சதவீத பங்குகளை விற்று விடுகின்றனர். பெரும்பான்மையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்தவர்கள் பெரும் நிறுவன முதலாளிகள், இவர்கள் நிறுவனத்தை உருவாக்கிய உடன் பெறும் நிறுவனங்கள் அவற்றை வாங்கிவிடிகின்றன.

நெடுந்தூர குறிக்கோளுடன் செயல்படுவதே இலக்கு

நெடுந்தூர குறிக்கோளுடன் செயல்படுவதே இலக்கு

பெரிதாகக் கனவு காண்பது மற்றும் நீண்ட தூர குறிக்கோளுடன் செயல்படுவதே இலக்காக இருக்க வேண்டும். இவர்கள் மிகவும் திறமைசாலிகள், எனவே இவர்களால் சிறந்த முடிவுகளுடனும், எண்ணங்களுடனும் வேலை செய்ய வேண்டும். எல்லோரும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய நிலையை அடைய வழிகள் உள்ளன.

பிக் பஜார் டைரக்ட்

பிக் பஜார் டைரக்ட்

சென்ற மாதம் ஆன்லைன் ரீடெய்ல் சேவையான பிக் பஜார் டைரக்ட்டினை மூடப்போவதாக அறிவித்திருந்த பியானி அதனை இன்னும் ஒரு வாரத்தில் மூடப்போவதாக அறிவித்தார்.

ஃபூயூச்சர் குழுமத்தின் பிக் பஜார் டைரக்ட்டின் கீழ் 1000 முகவர்கள் உள்ளதாகவும் இதை 50,000 ஆக அதிகரிக்க முயற்சித்ததாகவும் அதில் நான்கு முறை முயன்றும் எந்தப் பலனும் இல்லை என்றதால் மூடப்போவதாகக் கூறினார்.

 

இ-காமர்ஸ் துறை சரியான நிலையில் இல்லை

இ-காமர்ஸ் துறை சரியான நிலையில் இல்லை

புதன்கிழமை இதைப்பற்றிக் கூறிய பியானி இ-காமர்ஸ் துறையினை இப்போது இயக்குவதற்கான சரியான நேரம் இல்லை இது எதிர்காலத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும்.

இப்போது இது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இ-காமர்ஸ் துறை என்று சரியாக செயல்படத் துவங்குகிறதோ அன்று நாங்கள் மீண்டும் இந்தத் துறையில் கால் பதிப்போம் என்றார்.

 

பேடிஎம் உடன் கூட்டணி

பேடிஎம் உடன் கூட்டணி

எனினும் இப்போது ஆம்னி சேனல் முயற்சியில் இறங்கி உள்ளோம். இதற்காக பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் வேல்லட் மார்க்கெட் மூலம் தங்களது பொருட்களை விற்க இருப்பதாக பியானி தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+