பெங்களுரூ: இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் முன்னணியாக இருக்கும் விப்ரோ நிறுவனம், நார்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சேவை நிறுவனமான NSB குழுமத்தின் 3 வருட ஐடி ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி விப்ரோ நிறுவனம் என்எஸ்பி குழுமத்திற்கு டேட்டா சென்டர் அமைத்தல், வொர்க்பிளேஸ் சொல்யூஷன், இந்நிறுவனத்தின் ஐடி செயற்பாடுகளின் டெலிவரி பிரேம்வொர்க் அமைக்கும் பணிகளைச் செய்ய உள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த எவ்விதமான நிதி தகவல்களும் இருதரப்பு வெளியிடவில்லை.
விப்ரோ தலைமையிலான ஐடி இன்பரா சேவையின் மூலம் என்எஸ்பி தனது வர்த்தகத்தில் அதிகளவில் செலவுகளைக் குறைக்கவும், நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும், குறைவான செலவில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை அளிக்க முடியும் என நம்புகிறது.
அதுமட்டும் அல்லாமல் விப்ரோ-வின் இந்த ஐடி இன்பரா உதவியுடன் என்எஸ்பி அடுத்தத் தலைமுறை வளர்ச்சி மற்றும் வர்த்தகத்திற்காகத் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications