கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் வளாக பணித் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் எந்த கல்லூரிக்கல்ல படிச்சா அதிக சம்பளம் வாங்கலாம் மற்றும் எந்தப் படிப்புக்கு அதிக சம்பளம் என்று மனிதவள ஆலோசனை நிறுவனம் வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் டையர் 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக கல்லூரிகளைப் பிரித்து கேம்மஸ் நேர்முகத்தேர்வில் எவ்வாறு தங்களது நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றது என்றும் இந்தியாவின் சிறந்த 70 நிறுவனங்கள் மற்றும் மனிதவள ஆலோசகர்களிடம் இருந்து தவல்களைப் பேற்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்காக பி.டெக், எம்.டெக், எம்பிஏ மற்றும் பிற பட்டதாரிகள் (பிஏ, பி.காம், பிபிஏ) என மூன்று பிரிவுகளாக படிப்புகளைப் பிரித்து வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் மனிதவள ஆலோசனை நிறுவனம் கேம்ப்பஸ் நேர்முகத்தேர்வு மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதன் வேறுபாடுகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
எம்பிஏ
டையர் 1 கல்லூரிகளில் படிக்கும் எம்பிஏ மாணவர்கள் ஆண்டுக்கு 18.62 லட்சம் வரை சம்பளமும், இதுவே டையர் 2 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 8.5 லட்சம் வரையிலும் சம்பளமாகவும் டையர் 3 இல் படிக்கும் மாணவர்கள் 4.4 லட்சம் சம்பளமாகவும் பெறுகின்றனர்.
பி.டெக்
டையர் 1 கல்லூரிகளில் படிக்கும் பி.டெக் மாணவர்கள் ஆண்டுக்கு 13.6 லட்சம் வரை சம்பளமும், இதுவே டையர் 2 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 7 லட்சம் வரையிலும் சம்பளமாகவும் டையர் 3 இல் படிக்கும் மாணவர்கள் 4.7 லட்சம் சம்பளமாகவும் பெறுகின்றனர்.
எம்.டெக்
டையர் 1 கல்லூரிகளில் படிக்கும் எம்.டெக் மாணவர்கள் ஆண்டுக்கு 16 லட்சம் வரை சம்பளமும், இதுவே டையர் 2 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 8 லட்சம் வரையிலும் சம்பளமாகவும் டையர் 3 இல் படிக்கும் மாணவர்கள் 5.2 லட்சம் சம்பளமாகவும் பெறுகின்றனர்.
பிஏ, பி.காம், பிபிஏ
டையர் 1 கல்லூரிகளில் போன்ற பிஏ, பி.காம், பிபிஏ போன்று படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு 4 லட்சம் வரை சம்பளமும், இதுவே டையர் 2 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 2.7 லட்சம் வரையிலும் சம்பளமாகவும் டையர் 3 இல் படிக்கும் மாணவர்கள் 2.17 லட்சம் சம்பளமாகவும் பெறுகின்றனர்.


Click it and Unblock the Notifications