அமெரிக்க கனவு: ஹெச்1-பி விசா-வை விட 'ஈபி-5 விசா' பெஸ்ட்..!

சென்னை: கடந்த 15 வருடங்களில் இந்தியர்களின் மிகப்பெரிய கனவாக இருப்பது அமெரிக்காவில் ஒரு வேலை மற்றும் வாழ்க்கை. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்தக் கனவை நினைவாக்கவே பன்னாட்டு நிறுவனங்களைக் குறிவைத்து வேலைக்கும் சேர்வது இந்தியர்களின் வழக்கமாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கண்டிப்பாக அமெரிக்காவில் வாடிக்கையாளரோ அல்லது அங்குக் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகமும் இருக்கும் என்பது தான். இத்தகைய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துவிட்டால் எச்1-பி அல்லது எல்-1 விசா மூலம் அமெரிக்கச் செல்ல முடியும் என்பது தான் இதன் உள்நோக்கம்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு வழி தற்போது இந்திய மக்களிடம் அதிகளவில் பிரபலம் அடைந்து வருகிறது. அது தான் 'ஈபி-5 விசா'.

'ஈபி-5 விசா'

'ஈபி-5 விசா'

அமெரிக்க வாழ்க்கையை அடைய இந்திய மக்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத ஒரு வழிதான் 'ஈபி-5 விசா'. பொதுவாக அமெரிக்காவிற்குத் திறமைசாலிகளைத் தனது நாட்டிற்கு ஈர்த்து அவர்களின் மூலம் உலக நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடையும்.

இதேபோல் திறமையும் முதலீட்டையும் ஒன்றாக ஈர்க்கும் ஒரு முறை தான் இந்த 'ஈபி-5 விசா'.

 

கிரீன் கார்டு

கிரீன் கார்டு

அமெரிக்க அரசு, 'ஈபி-5 விசா என்னும் குடியேற்ற முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 5,00,000 டாலர் அதாவது இன்றைய மதிப்பில் 3.35 கோடி ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 18 மாதத்தில் அமெரிக்க அரசு அவருக்கு நிரந்தரக் குடியுரிமை மற்றும் அமெரிக்காவில் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதற்கான உரிமையும் அளிக்கிறது.

பிரபலம்

பிரபலம்

இந்தியாவில் கடந்த 2 வருடமாகத் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஸ்டார்ப்-அப் நிறுவன தலைவர்கள், செல்வந்தர்கள் எச்1-பி மற்றும் எல்-1 விசா முறைகளைத் தவிர்த்து 'ஈபி-5 விசா' முறையை அதிகளவில் நாடி வருகின்றனர்.

எஸ்ஸல் குரூப்

எஸ்ஸல் குரூப்

சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் எஸ்ஸல் குழுமத்தின் புதிய துவக்கங்கள் பிரிவின் துணை தலைவர் சச்சின் சந்தாவர்கர் ஈபி-5 விசா பெற விண்ணப்பம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

 சுதிர் வேதாந்தம்

சுதிர் வேதாந்தம்

அதேபோல் மெக்கானில் இன்ஜினியர்ங் பரிவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற சுதிர் வேதாந்தம் அமெரிக்காவில் பாதுகாப்புத் துறை சார்ந்த கான்டிராக்ட் பெறப் பல தான் சந்திப்பதால் ஈபி-5 விசா பெற விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இவர் கீரின் கார்ட் பெற 1,500 - 8,000 டாலர் மட்டுமே ஆகும், ஆனால் இதனைப் பெற அவர் பல ஆண்டுக் காலம் காத்திருக்க வேண்டும். இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்கவே ஈபி-5 விசா பெற வேண்டு என அவர் முடிவு செய்துள்ளார்.

 

25,000 விண்ணப்பங்கள்

25,000 விண்ணப்பங்கள்

ஜனவரி - மார்ச் 2016ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஈபி-5 விசா பெறுவதற்காகச் சுமார் 25,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் தொழில்செய்வோர்கள் மட்டும் அல்லாமல் மாணவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழையத் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 10,000 பேர்

10,000 பேர்

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு சராசரியாக 10,000 பேருக்கு ஈபி-5 விசா வழங்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+