சென்னை: நாட்டின் தொழில்துறை உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியில் சென்ற ஜூலை மாதம் மட்டும் 2.4 சதவீதம் குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் தொழில் துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2.4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் நாட்டில் 75 சதவீத தயாரிப்பு பங்களிப்பைக் கொண்டுள்ள தொழில்துறை உற்பத்தித் துறை 3.4 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது என்றும் ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 4.8 சதவீதமாகத் தொழில் துறை வளர்ச்சி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மந்தமாக உள்ள தொழில்துறை வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் மாதத்தில் மட்டும் 15 மாத சரிவாக 0.2 சதவீதம் வளர்ச்சி மட்டுமே உள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று காய் கரிகளின் விலையில் பணவீக்கம் குறைந்துள்ளது எதிர்பார்த்ததே என்றும் மின்சார துறை 1.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications