பெங்களூர்: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த நேரடி வரி வசூல் 15.03 சதவீதம் உயர்ந்து 1.89 லட்சம் கோடி ரூபாய் என அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளது.

முதல் ஐந்து மாதத்தில் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் வசூலிக்கப்பட்ட பெருநிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி போன்றவை நடப்பு நிதி ஆண்டின் மொத்த 22.30 சதவீத நிதிநிலையிற்கு போதுமானதாக அமைந்துள்ளதாக நேரடி வரிக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி வசூல் 24.06 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் மொத்த பெறு நிறுவன வருமான வரியாக 11.55 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் 22.18 சதவீதம் அதிகமாக அதாவது 77,080 கோடி வரிப் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு நேரடி வரி வசூல் மூலமாக 8.47 லட்சம் கோடியும்,
சுங்க வரி, கலால் வரி, சேவை வரி என மறைமுக வரியாக 7.79 லட்சம் கோடியும் 2016-2017 நிதி ஆண்டில் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications