துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டிடம் துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா, இதில் 22 அற்புதமான வீடுகளை மெக்கானிக்காக இருந்து தொழிலதிபராக மாறிய ஒரு இந்தியரிடம் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
இந்தக் கட்டிடத்தில் அதிகப்படியான வீடுகளை உடையவரும் இவர்தான் என்று காலீஜ் டைம்ஸ் என்ற நாளிதழ் ஜார்ஜ் வி நேரேபரம்பிளின் பேட்டியை வெளியிட்டுள்ளது.
22 வீடுகளோடு நிறுத்தப் போவதில்லை
ஜார்ஜ் வி நேரேபரம்பிள் இந்தப் பேட்டியில் கூறும்போது நான் இந்த 22 வீடுகளோடு நிறுத்தப் போவதில்லை, இன்னும் நல்ல விலைக்கு வீடுகள் வரும்போது வாங்கத்தான் போகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து கனவு காண்பேன்
நல்ல விலைக்குக் கிடைக்கும் போது கண்டிப்பாக வாங்குவேன். "நான் கனவு காண்பவன், தொடர்ந்து கனவு காண்பேன்" என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காரணம்
கேரளாவில் பிறந்த ஜார்ஜ் வி நேரேபரம்பிள் உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் அதிக வீட்டை வைத்திருக்கும் ஒரு பெரிய தனிநபர் உரிமையாளராக உள்ளார்.
இன்று இந்த நிலைக்கு இருபதர்க்கு இவரை உறவினர் விளையாட்டுக்காக உன்னால் 828 மீட்டர் உள்ள பூர்ஜ் கலிபாவில் கால் கூட எடுத்து வைக்க இயலாது என்று கூறியதே பெரிய காரணமாக இருந்துள்ளது.
வீடு வாடகை விளம்பரம்
2010 ஆம் ஆண்டு பூர்ஜ் கலிபாவில் வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்த அடுத்த நாளே அந்த வீட்டிற்கு வாடகை செலுத்தி வசிக்க துவங்கி உள்ளார்.
22 வீடுகள்
6 வருடங்கள் கழித்து இன்று 900 குடியிருப்புகள் உள்ள இந்தக் கட்டிடத்தில் 22 வீடுகளை தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறார். மேலும் இதில் 5 வீட்டை வாடகைக்கு அளித்துள்ளதாகவும், மீதம் இருக்கும் வீடுகளையும் வாடகைக்கு விட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏசி விற்பனை
1976 ஆம் ஆண்டு முதன் முதலாக மிகவும் வெப்பமான பகுதியான சார்ஜாவில் குளிர் சாதன பொருட்கள் ஏசி போன்றவற்றை விற்கச் சென்ற இருக்கிறார் ஜார்ஜ் வி நேரேபரம்பிள்.
குப்பையை பணமாக்கும் முயற்சி
இவருடைய 11 வயதிலேயே தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்தது மட்டும் இல்லாமல் குப்பையை பணமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்.
இவரது ஊரில் பருத்தி ஏற்றுமதி செய்து வருபவர்களில் பலர் பஞ்சை மட்டும் பிரித்து எடுத்துவிட்டு அதில் உள்ள கொட்டையை குப்பையில் போட்டுள்ளதை பார்த்த இவர் அதில் இருந்து பசை எடுத்து லாபம் பார்த்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் புளியங்கொட்டை விதைகள் போன்றவற்றை சேகரித்து அதைக் கால்நடை தீவனங்களுக்காக விறைப்பன செய்துள்ளதாக தன்னுடைய கடந்த காலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications