சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் தங்களது நிறுவன ஊழியர்களில் ஐடி சப்போர்ட் செயல்பாடுகள் செய்பவர்கள் இனி வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்ற சலுகையை அறிவித்துள்ளது.
டீநெக், நியூ ஜெர்சியினை-தலைமை இடமாக செயல்பட்டு வரும் காக்னிசன்ட் நிறுவனம் தங்களது இந்திய ஊழியர்களுக்குப் புதன்கிழமை இனி வீட்டில் இருந்தபடியே வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலை செய்யலாம் இது இடப்பற்றாக் குறையை சமாளிக்க மட்டுமே என்று இது குறித்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளது.
கார்ப்பரேட் செயல்பாடுகள்
புதிய முறையினால் மனித வளங்கள், நிதி, மார்கட்டிங் போன்ற தொடர்புடைய வேளைகள் செய்யும் ஊழியர்கள் பயன்பெறலாம் என்றும், யாரெல்லாம் வாடிக்கையாளருடன் தொடர்பு இல்லாமல் ஆதரவு பணிகளைச் செய்து வருகிறார்களோ அவர்கள் அனைவரும் பயன்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அலுவலகத்தில் உள்ள இட நெருக்கடி குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
இது குறித்து ஊழியர் ஒருவரிடம் கேட்கப்பட்ட போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது ஆனால் இது அனைத்து பகுதியிலும் இருந்ததில்லை. இப்போது இந்தியாவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கோரிக்கை நிர்வாகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்று கூறினார்.
இது குறித்து காக்னிசன்ட் நிர்வாகம் கூறுகையில் இது அனைவருக்கும் கட்டாயம் அல்ல அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வுசெய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
காக்னிசன்ட்
இந்தியாவில் 11 நகரங்களில் இயங்கி வரும் காக்னிசன்ட் நிறுவனத்தில் 1,60,000 ஊழியர்களுக்கு மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இதில் அனைவருக்கும் இவ்வளவு இணையதள செலவுகள் என்று ஒதுக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் 1,500 ரூபாய் வரை மாதாந்திர இணையதள கொடுப்பனவாகப் பெறலாம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான காக்னிசன்ட் ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படியில் பணி செய்கின்றனர். ஆனாலும் இப்போது 90 சதவீதம் அலுவலகம் நிரம்பி உள்ளது என்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிரந்தர இருக்கை இருக்காது
வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நிரந்தர இருக்கை இருக்காது அதனால் அவர்கள் அலுவலகம் வரும்போது நிறுவனத்தின் இணையதளத்தில் உள்நுழைந்து இருக்கையைப் பதிவு செய்யது கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
விரும்பாத சில ஊழியர்கள்
அதே சமயம் இதை விரும்பாத சில ஊழியர்களும் உள்ளனர், அவர்கள் இந்த ஊழியர்கள் வரும் வழித்தடத்திற்கு என்று வாகனங்கள் முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் இதனால் பல வாகனங்கள் கலியாக வரும் இது நிறுவனத்திற்குப் பாதகமே என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது நல்லதோ கெட்டதோ இதனால் எனக்கென்று தனிப்பட்ட முறையில் வேலை செய்ய இருக்கை இல்லாமல் போவது சோகமாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications