பிசியான தொழிலதிபர்கள் பலரின் வெற்றியை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தொழிலுக்கு நேரம் ஒதுக்குவதை போலவே உடற்பயிற்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் சரியான அளவில் நேரம் ஒதுக்குவதை அறிந்து கொள்ளலாம்.
24 மணி நேரமும் தொழில் சிந்தனையுடன் இருக்கும் தொழிலதிபர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. அவ்வப்போது ரிலாக்ஸ் எடுக்க பொழுது போக்கிற்காகவும் நேரத்தை செலவிட வேண்டும்.
அந்த பொழுது போக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா, பாடல் பாடுவது, சமையல் செய்வது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆகியவைகள் பயனுள்ள பொழுதுபோக்குகளில் சில ஆகும்.
இந்நிலையில் ஐந்து இளம் தொழிலதிபர்கள் தங்கள் பிசியான ஷெட்யூல்களுக்கு இடையே பொழுது போக்கிற்கு எவ்வாறு நேரம் ஒதுக்குகின்றனர் என்பதை பார்ப்போம்.
சம்பக் டிசைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள்
கணவன் மனைவியான சுப்ரா ஷாதா ம்ற்றும் விவேக் பிரபாகர் தம்பதியினர் வேலை நேரம் போக மீதி நேரத்தில் பயனுள்ள பொழுது போக்கை கடைபிடித்து வருகின்றனர். கணவர் சமையல் அறையில் விதவிதமான உணவு வகைகளை சமைப்பதும், மனைவி ஓய்வு நேரத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதும் தான் இவர்களுடைய பொழுதுபோக்கு.
ஒவ்வொரு நாளும் புதிய வகை உணவு
பிரபாகர் தனது பொழுதுபோக்கு குறித்து கூறும்போது, 'தினசரி விதவிதமான உணவு வகைகளை தயாரித்து குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வதே எனது பொழுதுபோக்கு.
ஒவ்வொரு நாளும் புதிய வகை உணவுகளை கண்டுபிடிப்பதே எனது குறிக்கோள் குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து, இத்தாலி வகை உணவுகளை தயாரிப்பதுதான் எனது விருப்பம். தனது புதுப்புது கண்டுபிடிப்பு உணவு வகைகளை அனைவரிடத்திலும் பரப்ப வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறியுள்ளார்.
சுப்ரா ஷாதா - யோகா
சுப்ரா ஷாதா தனது பொழுதுபோக்கு குறித்து கூறுகையில், தனது எட்டு வயது ஒரே மகளை பள்ளிக்கு அனுப்பிய பின்னர் தினமும் காலை குறைந்தது ஒரு மணி நேரம் யோகாவில் உட்காரவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது. யோகாவின் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் யோகாவின் பல நிலைகளை கடக்க வேண்டும் என்பதே குறிக்கோளாம்.
யோகா செய்வது ஒரு பொழுதுபோக்காக மட்டும் கருதாமல் மனிதர்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இதை கருத வேண்டும் என்பதே இவரது விருப்பம். பீகாரில் யோக பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ள இவர், யோகா குரு ஒருவரின் துணையோடு அந்த பள்ளியை நடத்தி வருகிறார். யோகா, உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் விஷயம் என்பதால் அரசு இதுகுறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இவரது முக்கிய கோரிக்கைகளில் ஒன்று ஆகும்.
இன்மொபி (InMobi) நிறுவன உரிமையாளர்
மும்பையில் பிறந்து வளர்ந்து, பெங்களூரில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கி வரும் இவர், தனது தொழில் மற்றும் பொழுதுபோக்கிற்காக நேரம் செலவிடுவது குறித்து கூறியபோது, 'தொழிலுக்கு செலவு செய்யும் நேரம் தவிர, மீதி நேரத்தை நான் குழுக்களுடன் கூடிய விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். குறிப்பாக பேஸ்கட்பால், கிரிக்கெட் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த விளையாட்டுக்கள்' என்று கூறியுள்ளார். பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே இவர் பேஸ்கட் பால் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்கட் பால் விளையாட்டு தவிர நவீன் திவாரிக்கு மிகவும் விருப்பமான ஒன்று சைக்கிள் ஓட்டுவது மற்றும் ரன்னிங். இவை இரண்டிலும் உடல் மட்டுமின்றி மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. பெங்களூரு சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது என்பது சவாலான வேலை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் நான் ரெகுலராக பெங்களூரில் சைக்கிள் ஓட்டி வருகிறேன். மேலும் நேரம் கிடைக்க்கும்போதெல்லாம் நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் சுற்றுலா செல்வதும் எனக்கு பிடித்தமான ஒன்று.
பெங்களூரு சாலைகளில் சைக்கிள்
பேஸ்கட் பால் விளையாட்டு தவிர நவீன் திவாரிக்கு மிகவும் விருப்பமான ஒன்று சைக்கிள் ஓட்டுவது மற்றும் ரன்னிங். இவை இரண்டிலும் உடல் மட்டுமின்றி மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
பெங்களூரு சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது என்பது சவாலான வேலை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் நான் ரெகுலராக பெங்களூரில் சைக்கிள் ஓட்டி வருகிறேன். மேலும் நேரம் கிடைக்க்கும்போதெல்லாம் நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் சுற்றுலா செல்வதும் எனக்கு பிடித்தமான ஒன்று.
ஜூம் கார் நிறுவன உரிமையாளர்:
30 வயதே ஆன அமெரிக்காவை சேர்ந்த இவர் தற்போது பெங்களூரில் தொழிலதிபராக உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து வரும்போது தனது தொழிலை மட்டும் கொண்டு வராமல் தனது சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கையோடு கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்காவில் சிறுவயதில் இருந்தே டென்னிஸ், பேஸ்கட்பால், கால்பந்து, கோல்ப் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமாக இருந்த இவர், தற்போது பெங்களூரிலும் தொழில் போக ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்தமான விளையாட்டுக்களுக்கு நேரம் ஒதுக்குகிறார். அதுமட்டுமின்றி ஜிம்னாஸ்டிக், வெயிட் லிப்டின் உள்பட பல விளையாட்டுக்களை அவர் தேர்வு செய்து டிரெனிங் எடுத்து வருகிறார்
காலை ஏழு மணிக்கு நீங்கள் பெங்களூர் சிட்டியில் நடந்து போவதை பார்க்கலாம். காலை ஐந்து மணியில் இருந்து சுமார் 10 கிமீ தினமும் இவர் வாக்கிங் செல்கிறார். காலையில் வாக்கிங் சென்றால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதே இவரது முக்கிய கருத்து.
விளையாட்டுக்கு நேரம்

10 கிமீ தினமும் வாக்கிங்
காலை ஏழு மணிக்கு நீங்கள் பெங்களூர் சிட்டியில் நடந்து போவதை பார்க்கலாம். காலை ஐந்து மணியில் இருந்து சுமார் 10 கிமீ தினமும் இவர் வாக்கிங் செல்கிறார். காலையில் வாக்கிங் சென்றால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதே இவரது முக்கிய கருத்து.
பிராக்டோ நிறுவன உரிமையாளர்
பரபரப்பான தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் நேரம் ஒதுக்கும் மிகச்சில தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். 29 வயதில் தொழிலதிபராக இருப்பதோடு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவது என்பது மிகப்பெரிய விஷயம். இதை சரியாக பேலன்ஸ் செய்து கவனித்து அரும் ஷாஷாங் அவர்களுக்கு மலையேறுதல் மிகவும் பிடித்தமான ஒன்று.
ஆப்பிரிக்க மலைகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மலையேறும் பயிற்சியில் ஈடுபடும் இவர் தற்போது வரும் அக்டோபரில் பெங்களூரில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டிக்காக பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு நீச்சல். உயரமான இடத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து நீச்சல் அடிப்பது இவருக்கு கைவந்த கலை.
மலையேறும் பயிற்சி - மாரத்தான் போட்டிக்காக பயிற்சி
ஆப்பிரிக்க மலைகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மலையேறும் பயிற்சியில் ஈடுபடும் இவர் தற்போது வரும் அக்டோபரில் பெங்களூரில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டிக்காக பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு நீச்சல். உயரமான இடத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து நீச்சல் அடிப்பது இவருக்கு கைவந்த கலை.
பிக்பாஸ்கெட்.காம் நிறுவன உரிமையாளர்
இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு நல்ல இசையை ரசிக்கும் கலைஞர். இஞ்சினியரிங் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே இசையில் ஆர்வம் கொண்ட இவருக்கு தற்போது 54 வயதாகியும் இன்னும் இசையில் உள்ள நாட்டம் அதிகரித்துள்ளதே தவிர, கொஞ்சம் கூட குறையவில்லை.
இவரும் இவருடைய மூத்த மகனும் பாடல்கள் பாட, இவரது இளைய மகன் டிரம்ஸ் வாசிக்கின்றார். இதுதான் இவருடைய ஓய்வு நேரத்தின் பொழுதுபோக்கு. கிட்டத்தட்ட அனைத்து இசைக்கருவிகளையும் வாங்கி வைத்துள்ள இவர் தனது மகன்களுக்கு டிரைனிங் கொடுப்பதோடு அவரும் அவ்வப்போது இசையில் மூழ்கியுள்ளார்.
அலுவலகத்தில் இவர் வேலையில் பிசியாக மூழ்கியிருக்கும் போதும் இசை ஒரு பக்கம் மெல்லிய ஓசையுடன் ஒலித்து கொண்டே இருக்கும். நான் வேலையில் மூழ்கியிருந்தாலும் என்னுடைய அறையின் கதவை மூடிவிட்டு இசையை ரசித்து கொண்டேதான் வேலை செய்வேன்' என்று கூறியுள்ளார்.
மகன்களுக்கு டிரைனிங்

பிசியாக மூழ்கியிருக்கும் போதும் இசை