2008 முதல் இந்தியர்களின் சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்று தெரியுமா..?

எட்டு வருடத்திற்கு முன் 2008 இல் பாதிப்படைந்த உலக பொருளாதார பின்னடைவுக்குப் பிறகு இன்று வரை இந்திய மக்களின் சம்பள உயர்வு 0.2 சதவீதம் மட்டுமே என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கார்ன் ஃபெரியின் ஹே குழுமம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 63.8 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் இந்தியர்களின் சம்பள உயர்வின் சராசரி 0.2 சதவீதமாகவே உள்ளது என்று புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ

சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ

இதே காலகட்டத்தில் சீனாவில் சம்பள வளர்ச்சி விகிதம் 10.6 சதவீதமும், இந்தோனேசியாவின் சம்பள வளர்ச்சி விகிதம் 9.3 சதவீதமும், மெக்சிகோவின் சம்பள விகிதம் 8.9 சதவீதமும் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

துருக்கி, அர்ஜென்டீனா, ரஷ்யா

துருக்கி, அர்ஜென்டீனா, ரஷ்யா

அதே சமயம் துருக்கியில் சம்பள விகிதம் -34.4 சதவீதமும், அர்ஜென்டீனாவில் -18.6 சதவீதமும், ரஷ்யாவில் -17.1 சதவீதமும், ப்ரேசிலில் -15.3 சதவீதமும் பெற்று மிக மோசமான நிலையில் உள்ளது.

ஜி20 நாடுகள்

ஜி20 நாடுகள்

மிக வேகமாக வளர்ந்து வரும் ஜி20 நாடுகளில் சில நாடுகள் அதிக வளர்ச்சி பெற்று இருக்க சில நாடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. ஆனால் இந்தியாவோ நடுத்தர இடத்தில் உள்ளது என்று அளிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊதிய உயர்வு

இந்தியாவில் ஊதிய உயர்வு

இந்தியாவில் ஊதிய உயர்வு மிகவும் சமமற்ற நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்த அறிக்கை ஆய்வு செய்துள்ள அனைத்து நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் 30 சதவீதம் வரை மக்களின் ஊதிய உயர்வு குறைவாக உள்ளது என்று கூறியுள்ளது.

முக்கிய தொழில் மற்றும் மேலாண்மை முடிவுகள் எடுக்கும் மேலாளர் போன்ற சீனியர் ஊழியர்களின் ஊதியம் திறன் பற்றாக்குறையால் அதிகமாக இருந்தாலும் பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவான சம்பளமே அளிக்கிறது. இதுவே குறைவான வேலை முன்னேற்றத்திற்குக் காரணம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குறைவான ஊதியத்திற்குக் காரணம்

குறைவான ஊதியத்திற்குக் காரணம்

கடினமான உழைப்பை அளிக்கும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளது தான் இந்தக் குறைவான ஊதியத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகளவில் அமெரிக்காவும் இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சி 2008 இல் இருந்து 10.2 சதவீதம் வளர்ச்சி பெற்ற நிலையிலும் பண வீக்கத்தால் சம்பளத்தில் 3.1 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது.

கனடா மற்றும் பிற நாடுகள்

கனடா மற்றும் பிற நாடுகள்

வளர்ந்த நாடுகளில் கனடாவிலும் 11.2 சதவீதம் வளர்ச்சி விகிதம் உள்ள நிலையில் 7.2 சதவீதம் சம்பள வளர்ச்சியை மட்டுமே பெற்று இருக்கிறது.

பிற வளர்ந்த நாடுகளான ஆஸ்த்ரேலியாவில் 5.9 சதவீதமும், பிரான்ஸில் 5.2 சதவீதமும், ஜெமனியில் 5 சதவீதமும், இத்தாலியில் 2.4 சதவீதம் 2008 முதல் சம்பள வளர்ச்சி பெற்றுள்ளனர்.

 

உலகளவில் சம்பள வளர்ச்சி

உலகளவில் சம்பள வளர்ச்சி

உலகளவில் உள்ள சம்பள வளர்ச்சி சராசரியை காண்கையில் இது மிகவும் மோசமான ஒரு பொருளாதார வளர்ச்சியாகும். இந்தச் சம்பள வளர்ச்சி வேறுபாட்டிற்கு ஒவ்வொரு நாடுகளின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக காரணங்களும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஃப்ரோஸ்ட் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+