சென்னை: உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் விற்பனையாளரான ஹவாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் துவங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை இன்னும் ஓர் இரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று சென்ற மாதம் கூறியிருந்தோம்.

சீனாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹவாய் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தனது தயாரிப்பைத் துவங்க இருப்பதாகவும் இதற்காகச் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்துரில் உள்ள ஃபெலெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஃபெலெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே லெனோவா நிறுவனத்தின் மோடோரோலா நிறுவனத்திற்கு ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.
மாதம் 200,000 ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்க ஹாவாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் பின்னர் படிப் படியாக உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஹவாய் நிறுவனமும் ஃபெலெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனமும் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஹவாய் நிறுவனம் இந்தியாவில் 16 வருடங்களாக மொபைல் வர்த்தகம் செய்து வந்த நிலையில், 1999 ஆம் ஆண்டே பெங்களூரூவில் தங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஹாவாய் மற்றும் ஹானர் என்ற இரு பிராண்ட் பெயர்கள் கொண்ட நிறுவனமாக ஸ்மார்ட் போன்களை விற்று வருகிறது. தனது முதல் ஹவாய் பிராண்ட் போனை இந்தியாவில் ஏறத்தாழ மூன்று வருடம் கழித்து அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹவாய் நிறுவனம் தான் இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் சீனா நிறுவனம் என்று குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications