ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஐபிஓ பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை..!

மும்பை: இந்தியாவின் 6 வருட ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓவாக பாரக்கபடுகிறை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன ஐபிஓ.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன ஐபிஓவின் மதிப்பு 6,057 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பங்கின் விலை 300 ரூபாய் முதல் 334 வரை

பங்கின் விலை 300 ரூபாய் முதல் 334 வரை

இந்திய சந்தையில் பொதுமக்களுக்கான இந்நிறுவனத்தின் முதல் ஐபிஓ செப்டம்பர் 19 திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 21 வரை வரைருக்கிறது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 300 ரூபாய் முதல் 334 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1,635.33 கோடி

1,635.33 கோடி

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் 334 ரூபாய் விலை மதிப்பில் 4.89 கோடி மதிப்புள்ள பங்குகளை ஐபிஓவின் மூலம் விற்க முன்வந்துள்ளது. மேலும் தங்களது ஆஸ்தான முதலீட்டாலர்களிம் இருந்து 1,635.33 கோடியை இந்நிறுவனம் திரட்டி உள்ளது.

மிகப்பெரிய ஆஸ்தான முதலீட்டாளர்கள்

மிகப்பெரிய ஆஸ்தான முதலீட்டாளர்கள்

இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய ஆஸ்தான முதலீட்டாளர்களைப் பெற்றுள்ளதும் இந்நிறுவனம் மட்டுமே ஆகும். மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ், நோமுரா, சிங்கப்பூர் அரசு, யுடிஐ எம்.எப், ரஸ்ஸல் இன்வெஸ்ட்மென்ட், ஜிஎம்ஓ வளர்ந்துவரும், எஸ்பிஐ எம்.எப், டாடா எம்.எப், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப், ரிலையன்ஸ், பிர்லா சன் லைப், கோடக் மகேந்திரா என 40 மிகப்பெரிய ஆஸ்தான முதலீட்டாளர்களை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பெற்றுள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு

6 ஆண்டுகளுக்கு பிறகு

2010 ஆம் ஆண்டு கோல் இந்தியா 15,000 கோடியை ஐபிஓவின் மூலம் திரட்டியது அதற்கு அடுத்தபடியாக 6,057 கோடி ரூபாயை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஐபிஓ திரட்ட இருப்பதே அதிகமாகப் பார்க்கப்படுகிறது.

பங்குதாரர்கள்

பங்குதாரர்கள்

ஐசிஐசிஐ நிறுவனத்தின் இந்த இன்சூரன்ஸ் பிரிவில் ஐசிஐசிஐ வங்கிக்கு 68 சதவீத பங்குகளும், இங்கிலாந்தின் புரூடென்ஷியல் கார்ப்ரேஷன் நிறுவனத்திடம் 26 சதவீத பங்குகளும், பிரேஜி இன்வெஸ்ட் நிறுவனத்திடம் 4 சதவீதம், டெமாசெக் நிறுவனத்திடம் ஐசிஐசிஐ வங்கி சென்ற வருடம் தனது 2 சதவீத பங்குகளை விற்றது என நான்கு நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் செயல்பட்டு வருகிறது.

32 மில்லியன் பங்குகள்

32 மில்லியன் பங்குகள்

ஆஸ்தான முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கும் முன்பு 132 மில்லியன் பங்குகளுக்கு மேலாக இருந்ததாகவும், இப்போது 57,122,434 பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்காக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+