டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் விற்பனை பொருட்களின் ஏற்றுமதி அதிகளவில் குறைந்த காரணத்தால் இத்துறையில் சுமார் 70,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதித்துள்ளது என் அசோசாம் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை பொருட்களின் தேவை உள்நாட்டுச் சந்தையில் அதிகரித்த காரணத்தாலும் ஏற்றுமதி குறைந்த காரணத்தாலும் 2015-16ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் சுமார் 70,000 வேலைவாய்ப்புகள் பாதித்துள்ளது.

அசோசாம் மற்றும் Thought Arbitrage அமைப்பு இணைந்த நடத்திய இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இக்காலகட்டத்தில் டெக்ஸ்டைல் துறையில் ஏற்பட்ட அதிகளவிலான பாதிப்பே ஏற்றுமதி துறையில் வேலைவாய்ப்பு பாதிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை சந்தித்த காரணத்தால் சர்வதேச நுகர்வோர் சந்தையும் பாதித்தது. இதனால் மூலமாகவும் இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்படைந்தது.
டெக்ஸ்டைல் துறை, தோல் வர்த்தகம் உட்படச் சுமார் 7 துறை சார்ந்த வர்த்தகம் இக்காலகட்டத்தில் பாதித்துள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வந்தது, ஆகஸ்ட் மாதம் 0.3 சதவீதம் சரிந்து 21.51 பில்லியன் டாலராகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு 21.58 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications