டெல்லி: சீனாவின் வணிக இதழான ஹூரன் இந்தியாவில் உள்ள 399 பேர் கோண்ட பணக்கார தொழில் அதிபர்கள் பாட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சர்யா பாலகிருஷ்ணா 25,000 கோடி சொத்து மதிப்புடன் 25 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பதஞ்சலி
இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சர்யா பாலகிருஷ்ணா 25,000 கோடி சொத்து மதிப்புடன் 25 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பதஞ்சலி என்றவுடன் என அனைவருக்கும் நினைவுக்கு வருவது பாபா ராம்தேவ் என்றாலும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா இந்நிறுவனத்தின் நிர்வகித்து வருகிறார். இந்நிறுவனத்தின் 96 சதவீத பங்குகள் இவரிடம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் முதல் இடம்
பங்குச்சந்தையில் பட்டியல் கூட இடப்படாத ஒரு நிறுவனம் உலகின் மிகப்பரிய நிறுவன பட்டியலில் வந்திருப்பது அனைவரையும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை எழுப்பி உள்ளது.
இந்தியர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவே இந்த நிலைக்குக் காரணம் என்றும் விரைவில் முதல் இடத்தைப் பிடிப்போம் என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும் சன் பார்மசியூடிகல்ஸால் நிறுவனர் திலீப் சங்வி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆண்டுக்கு 5,000 கோடி
ஹூரன் இதழ் அறிக்கையின் படி இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நுகர்பொருள் தயாரிக்கும் நிறுவனமாகப் பதஞ்சலி நிறுவனம் இருப்பதாகவும் ஆண்டுக்கு 5,000 கோடி வரை லாபம் சம்பாதிப்பதாகவும் 2016-2017 நிதி ஆண்டிற்குள் இதை இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாபா ராம்தேவ்
பதஞ்சலி நிறுவனத்தின் 96 சதவீத பங்குகள் பாலகிருஷ்னாவிடமும் ஹரித்வாரில் செயல்பட்டு வரும் நுகர்பொருள் தயாரிப்பு ஆலை மட்டும் ராம்தேவ் பெயரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications