இன்போசிஸில் இருந்து வெளியேறும் 7வது உயர் அதிகாரி 'சஞ்சய் புரோஹித்'.. ஆடிப்போன நிர்வாகம்..!

இன்போசிஸ்.. இன்றைய இளைய சமுதாயத்தின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று. ஏன் பல தொழிலதிபர்களுக்கு இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய பாடம்.

ஆனால் சமீபத்தில் இந்நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்கள், பாதிப்புகள், பல வருடங்களாக நம்பிக்கையாக இருந்த பல உயர் அதிகாரிகள் தொடர் வெளியேற்றம் என இன்போசிஸ் நிறுவனத்திற்குத் திரும்பிய பக்கமெல்லாம் அடி.

சஞ்சய் புரோஹித்

சஞ்சய் புரோஹித்

விஷால் சிக்கா சீஇஓ-வாகப் பதவியேற்று 2 வருட காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர் மற்றும் முன்னாள் குளோபல் கன்சல்டிங் பிரிவு தலைவரான சஞ்சய் புரோஹித் 7வது உயர் அதிகாரியாக ராஜினாமா செய்துள்ளார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் கன்சல்டிங் பிரிவின் வர்த்தகம் அதிகளவில் பாதித்தது. இதற்கு முக்கியக் காரணம் 4 வருடத்திற்கு முன் 350 மில்லியன் டாலருக்கு இன்போசிஸ் கைப்பற்றிய லோடுஸ்டோன் நிறுவனம் தான்.

தொடர் ஊழியர்கள் ராஜினாமா

தொடர் ஊழியர்கள் ராஜினாமா

சஞ்சய் புரோஹித் இன்போசிஸ் கன்சல்டிங் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் லோடுஸ்டோன் நிறுவனத்தின் நிறுவனர் ரொனால்டு ஹாப்னர் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். இதன் எதிரொலியாக இப்பிரிவின் பல உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறியதால் கன்சல்டிங் பிரிவின் வர்த்தகம் அதிகளவில் பாதித்தது.

இந்தப் பாதிப்பால் இன்போசிஸ் காலாண்டு முடிவுகளிலேயே மிகப்பெரிய ஒட்டை விழுந்தது.

 

அமெரிக்கா முதல் இந்தியா வரை..

அமெரிக்கா முதல் இந்தியா வரை..

சஞ்சய் புரோஹித் நிர்வாகத் துணை தலைவர் மற்றும் முன்னாள் குளோபல் கன்சல்டிங் பிரிவு தலைவர் பதவிகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனத்தின் தனிப்பிரிவான யெட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் பிராடெக்ட் மற்றும் பிளாட்பார்ம் தலைவராக இருந்தார்.

இதன் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கன்சல்டிங் பிரிவின் தலைவராக அமெகரிக்க அலுவலகத்தில் பணியாற்றினார்.

18 மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில் சஞ்சய் புரோஹித் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு. இன்போசிஸ் சீஓஓ யு.பி. பிரவீன் ராவ் உடன் பணியாற்ற நியமிக்கப்பட்டார்.

 

ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குப் பணிமாற்றம் செய்யப்பட்ட சஞ்சய் புரோஹித் பணியிடத்தில் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க அலுவலகத்தில் கன்சல்டிங் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 மாதங்கள் முன்பு..

2 மாதங்கள் முன்பு..

2 மாதங்கள் முன்பே ஹெல்த்கேர் மற்றும் லைப் சையின்ஸ் பிரிவின் தலைவராக இருந்த மனிஷ் டேன்டான் ராஜினாமா செய்த நிலையில் தற்போது சஞ்சய் புரோஹித் இன்போசிஸ் நிர்வாகக் குழுவை மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.டி.ஷிபுலால்

எஸ்.டி.ஷிபுலால்

இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.டி.ஷிபுலால் சீஇஓ-வாக இருந்த வரை இந்நிறுவனத்தில் எவ்விதமான பாதிப்புமில்லை. ஆனால் ஷிபுலால் வெளியேற்றத்திற்குப் பிறகு இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தச் சீஇஓ யார் என்பதில் வந்தது பிரச்சனை.

புதிதாக ஒருவர்

புதிதாக ஒருவர்

அனைத்துத் தரப்பினரும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருக்கும் முக்கிய அதிகாரியே அடுத்தச் சீஇஓவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்போசிஸ் தலைமை நிர்வாகக் குழு வெளியில் இருந்து புதிதாக ஒருவரை சீஇஓ-வாக நியமிக்கத் திட்டமிட்டது.

இதனால் நிர்வாகக் குழுவில் இருந்த பல உயர் அதிகாரிகள் தொடர்ந்து தங்களது ராஜினாமாவை அறிவித்தனர்.

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

எதற்கும் கலங்காத இன்போசிஸ் SAP நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா-வை தனது புதிய சீஇஓ-வாக நியமித்தது. விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாகப் பதவியேற்றிய பிறகு இந்நிறுவனத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டாலும், உயர் அதிகாரிகளின் ராஜினாமா-வை தடுக்க முடியவில்லை..

அடுத்தமட்ட உயர் அதிகாரிகள்

அடுத்தமட்ட உயர் அதிகாரிகள்

இன்போசிஸ் நிறுவனம் அதிகளவிலான உயர் அதிகாரிகள் வெளியேற்றத்தைக் கண்ட நிலையில், இதுபோன்ற நிலையில் இனி சிக்கிக்கொள்ளக்கூடாது என முடிவு செய்துள்ளது.

இதன் வெளிப்பாடாகவே நிறுவனத்தில் அடுத்தமட்ட உயர் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குப் புதிய பயிற்சிகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயிற்சி பெறும் அதிகாரிகள் அனைவரையும் புதிய பொறுப்புகளிலும், துறையிலும் பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

 

கிருஷ்ணமூர்த்திச் சங்கர்

கிருஷ்ணமூர்த்திச் சங்கர்

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய லீடர்ஷிப் திட்டங்கள் நிறுவனத்தைப் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லுவது மட்டும் அல்லாமல் புதிய நிர்வாகத் தலைவர்களை உருவாக்கும் மிகப்பெரிய முயற்சி என இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்திச் சங்கர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

25 ஊழியர்கள்

25 ஊழியர்கள்

இத்திட்டத்தில் லீடர்ஷிப் மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்குத் தேவையான பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதல்கட்டமாக அடுத்தமட்ட உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் விதமாக 25 ஊழியர்களுக்கு மட்டும் இப்புதிய திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கிருஷ்ணமூர்த்திச் சங்கர் கூறினார்.

3-4 வருடங்கள்

3-4 வருடங்கள்

இத்தகைய பயிற்சி இன்போசிஸ் நிறுவனத்தில் அடுத்த 3-4 வருடங்கள் தொடர்ந்து நடக்கும். காரணம் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டத்திங்களுக்கு எத்தகைய நிர்வாகத் தலைவர்கள் வேண்டும் என்பதைக் கண்டறிய சில வருடங்கள் தேவைப்படும் என 3-4 வருடங்கள் கிருஷ்ணமூர்த்தித் தெரிவித்தார்.

புதிய வழிமுறை

புதிய வழிமுறை

அதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்பதைக் கண்டறியும் ஒரு புதிய செயல்வடிவத்தையும் உருவாக்கியுள்ளது.

வெளியேற விரும்பும் உயர் அதிகாரிகளின் தடுக்கும் விதமாகவே இத்தகைய பயிற்சி திட்டங்கள் ஐடி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.

 

 இன்போசிஸ்

இன்போசிஸ்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+