உலகின் முன்னணி வர்த்தகச் சந்தை ஆய்வு அமைப்பான எஸ் அண்ட் பி குளோபல் ரேடிங்கஸ் நிறுவனம் அடுத்தச் சில வருடங்களில் இந்தியா எவ்விதமான உந்து சக்தியும் இல்லாமல் இயல்பான வர்த்தகத்தைக் கொண்டே 8 சதவீதம் வளர்ச்சியை எளிமையாக எட்டிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீர்திருந்த நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது என எஸ் அண்ட் பி நிறுவனம் ஆசிய பசிபிக் பொருளாதார ஸ்னாப்ஷாட் நிகழ்ச்சியில் தெரிவித்தது.

இந்தச் சீர்திருத்த நடவடிக்கையில் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு மிகப்பெரிய பங்கு உண்டு எனவும், வேகமாக வளர்ச்சியை அடைந்து வரும் நுகர்வோர் சந்தையும் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளதாகவும் இந்த வர்த்தக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்குத் தற்போது மிகப்பெரிய தடையாக இருப்பது பணவீக்கம் தான், இதனைக் களைய நுகர்வோர் சந்தையில் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் உணவுப் பொருள், எரிவாயு, மற்றும் பிற பொருட்களின் விலையைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது என எஸ் அண்ட் பி தெரிவித்தது.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவுகள் ஜனவரி-மார்ச் மாத காலத்தில் 7.9 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் -ஜூன் காலாண்டில் 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் 2016-17ஆம் நிதியாண்டின் முடிவில் இந்திய பொருளாதாரம் சுமார் 7.6 சதவீத வளர்ச்சியை அடையும் என எதிர்பார்ப்பதாகவும், அடுத்தச் சில வருடங்கள் வளர்ச்சி அளவு 8 சதவீதத்தையும் தாண்டும் எனவும் தனது கணிப்புகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது எஸ் அண்ட் பி அமைப்பு.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications