சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட வழிதடங்கங்களுக்கு மட்டும் புதிதாக 900 ரூபாய்க்கு விமான டிக்கெட் சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.

இந்த 900 ரூபாய் சலுகை கட்டணத்தில் கொச்சி-திருவனந்தபுரம், கவ்ஹாத்தி - பாக்தோகிறா, சண்டிகர்-ஸ்ரீநகர் வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
அதேபோன்று ஹைதராபாத்-கோயம்பத்தூர், டெல்லி - டேராடூன் போன்ற வழித்தடங்களில் 1299 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்.
டெல்லி-சென்னை போன்ற மெட்ரொ வழித்தடங்களில் 3,199 ரூபாய் கட்டணத்தில் பயணக்கிலாம்.
மேலும் ஹைதராபாத்-கோவா வழித்தடத்தில் பயணிக்க 1,699 ரூபாயும், டெல்லி-வதோத்ராவிற்கு செல்ல 2,599 ரூபாய் கட்டணம் என்று அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் இந்த சலுகை விலை டிக்கெட் எப்போது வரை கிடைக்கும் என்றும் எத்தனை டிக்கெட்கள் உள்ளன என்று எதையும் இந்த அறிவிப்பில் குறிப்பிடவில்லை.

ஆனால் இந்தச் சலுகை டிக்கெட்கள் இண்டிகோ இணையதளத்தில் இந்த மாதம் முதல் அடுத்த வருடம் வரை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதற்கு விலை குறைப்பு மிகவும் உதவுவதாக உள்ளூர் விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 26 சதவீதம் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications