பெங்களூரு: மைக்ரோபிளாகிங் சமூக வலைத் தளமான டிவிட்டர் நிறுவனத்தின் மேம்பாட்டு மையம் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. இப்போது இங்கு உள்ள பொறியாளர் பிரிவை மூட டிவிட்டர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆனால் எத்தனை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போகிறது என்று எதையும் நிறுவனம் அறிவிக்கவில்லை.
இது குறித்து டிவிட்டர் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் கேட்ட போது உலகளாவியைப் பொறியாளர் பிறிவை முடப் போவதாகவும், இது சாதாரண வணிக ஆய்வு நோக்கத்தின் பகுதியாகவே செயல்படுத்தப்படிகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கவுரமாகவே வெளியேற்றப்படுவார்கள்
இந்நிறுவனத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் ஒவ்வொருவரின் பங்களிப்புக்கும் நன்றி சொல்கிறோம், இங்குப் பணிபுரிந்த ஒவ்வொருவரும் கவுரமாகவே வெளியேற்றப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற பிரிவுகள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் பிற பிரிவுகளான பயனர்கள், பங்குதாரர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கான பிரிவுகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனம் கூறுகையில் இந்தியா உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தை என்றும் அதற்கான முக்கிய முடிவுகளை நிறுவனம் எடுத்து வருகிறது பயனர்கள் அதிகரிக்க மற்றும் பார்வைகளை விரிவுபடுத்த இன்னும் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிப்டையல் மொபைல் சொல்யூசன்ஸ்
சென்ற வருடம் பெங்களூரை சேர்ந்த மொபைல் மார்க்கெட்டிங் நிறுவனமான ஜிப்டையல் மொபைல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் முதல் முறையாக வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
அதற்காகவே இந்நிறுவனம் பெங்களூரில் பொறியாளர் பிரிவை அமைத்தது. ஜிப்டையல் நிறுவனத்தை என்ன விலை கொடுத்து கைப்பற்றியது என்று டிவிட்டர் தெரிவிக்கவில்லை என்றாலும் 30 முதல் 40 மில்லியன் அதாவது 185 முதல் 247 கோடி ரூபாயாக இருக்கும் என்று அறிக்கை கூறப்படுகிறதது.
காலாண்டு முடிவுகள் ஏமாற்றம்
பேஸ்புக் போன்ற போட்டி நிறுவனங்களின் வேகத்துக்கு டிவிட்டரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றும் இதன் காலாண்டு முடிவுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது காலாண்டு நல்ல முடிவுகளை அளிக்கும் என்றும் இந்நிறுவனம் எதிர்பார்த்ததைவிட விளம்பரதாரர்களிடம் இருந்து நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழுவான நிலை
தனது பிராண்டு வணிகத்தில் இன்னும் நல்ல வழுவான நிலையிலேயே டிவிட்டர் உள்ளதாகவும், சில புதிய சவால்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications