இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் உள்கட்டமைப்பு மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு புதிய வர்த்தகத்தை உருவாக்கவும், முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு இந்தியாவில் 100 ஸ்மார்ட்சிட்டி-களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது.
இந்த ஸ்மார்ட்சிட்டியில் உலகத் தரத்திற்கு இணையான அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. அந்த வகையில் 100 முக்கிய நகரங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை மத்திய அரசு கடந்த ஒரு வருடமாகச் செய்து வருகிறது.
முதல் சுற்று அறிவிப்புகள் 2 பகுதியாக 33 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2வது சுற்றின் அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் 4 முக்கிய நகரங்கள் ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
27 நகரங்கள்
மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் 2வது சுற்று அறிவிப்பில் சுமார் 27 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே பலரும் எதிர்பார்க்கப்பட்ட மோடியின் தொகுதியான வாரனாசி, நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் 23வது நகரமாக இணைந்துள்ளது.
வெங்கையா நாயுடு
2வது சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 27 நகரங்களில் மத்திய அரசு சுமார் 66,883 கோடி ரூபாய் முழுமையாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இப்பட்டியலில் வெளியிடப்பட்ட 27 நகரங்களில் 79 சதவீதம் அப்பகுதி வாரியான வளர்ச்சிக்கும், 21 சதவீதம் இந்திய வளர்ச்சியை மையமாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என மத்திய நகரபுற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
மாநில வாரியாக
27 நகரங்கள் கொண்டு 2 சுற்று ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 நகரங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் தலா 4 நாகரங்களும் ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகையில் மிகப்பெரிய பங்கை பெறுகிறது.
அதேபோல் உத்திர பிரதேசத்தில் அக்ரா, கான்பூர் மற்றும் வாரனாசி ஆகிய 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில்
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மாலையில் அறிவித்த ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் தமிழ்நாட்டில் மதுரை (12 இடம்), சேலம் (18 இடம்), தஞ்சாவூர் (21வது இடம்), வேலூர் (27 வது இடம்) ஆகியவை இடம் பிடித்துள்ளது.
48,000 கோடி ரூபாய்
தற்போது தேர்தெடுக்கப்பட்டுள்ளத 27 நகரங்களுக்கு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் வீதம் 5 வருடங்களுக்கு ஸ்மார்ட்சிட்டி உருவாக்கும் பணிகளுக்காக மத்திய அரசு நிதிஒதுக்கியுள்ளது.
மாநில அரசுகளும் இத்திட்டத்திற்கு மோதுமான நிதியைத் திரட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல் சுற்று
2016ஆம் ஆண்டின் துவக்கத்தில் சுமார் 97 நகரங்கள் ஸ்மார்ட்சிட்டிக்கான போட்டியில் இறங்கிய நிலையில் ஜனவரி மாத அறிவித்த முதல் சுற்று அறிவிப்பில் தமிழ்நாட்டில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் சென்னை மட்டுமே இடம் பெற்றது. இச்சுற்றில் 20 நகரங்களை மத்திய அரசு அறிவித்தது.
இதன் பின் மே மாதம் துரிதமாக முடிக்க வேண்டிய முக்கிய நகரங்கள் பட்டியலில் 13 நகரங்களில் தமிழ்நாட்டு ஒரு நகரம் கூட இடம் பிடிக்கவில்லை.
2வது சுற்று
இந்நிலையில் 2வது சுற்று அறிவிப்பில் வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டு நகரங்கள்
மத்திய அரசு இந்தியாவில் தேர்ந்தெடுத்த 100 முக்கிய நகரங்களில் கோயம்புத்தூர், சென்னை, வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 12 நகரங்கள் இடம்பெற்று இருந்தது.
இதில் 6 நகரங்கள் மட்டுமே இதுவரை தமிழ்நாடு சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
60 நகரங்கள் முடிந்தது.
முதல் சுற்றில் 20 நகரங்கள், பாஸ்ட் டிராக் பிரிவில் 13 நகரங்கள், 2வது சுற்றில் 27 நகரங்கள் என் சுமார் 60 நகரங்களுக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளித்து ஸ்மார்ட்சிட்டி உருவாக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.
மீதமுள்ள 40 நகரங்கள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி.. எப்படி இருக்கும்..?
சூப்பர் ஐடியா..!
10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications