பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று மிகப் பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
பெங்களூருவரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒரு வருடத்தில் தனது பயனர்கள் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 25 மில்லியன் பயனர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
முதல் விற்பனை
முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு தங்களது இணையதளத்தில் புத்தகத்தை விற்றதில் இருந்து இன்று வரையிலான இந்தப் பயணத்தில் பயனர்களுக்குப் பல விதமான வசதிகளை ஏற்பாடு செய்து வந்துள்ளதாகவும், சேவையில் எதிர்பாராத அளவு தரத்தை மேம்படுத்தி உள்ளதாகவும், தொடர்ந்து மேம்படுத்த உள்ளதாகவும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.
இகாமர்ஸ்
உலகளவில் இந்தியாவில் இகாமர்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருவதாக பேங்க் ஆஃப் அமெர்க்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் 43 சதவீத பயனர்களை பிளிப்கார்ட் நிறுவனம் வைத்துள்ளதாகவும் இதுவே 2019-இல் 44 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆஸ்தான முதலீட்டாளர்களாக டைகர் க்ளோபல், அக்சல் பார்ட்னர்ஸ், மார்கன் ஸ்டான்லி, டி டோவே பொன்ற நிறுவனங்கள் உள்ளன என்றும் இது வரை 3 பில்லியன் வரை நிதியை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலீடுகள்
அதே நேரத்தில் மைந்த்ரா, போன்பி, லெட்ஸ்பை போன்ற நிறுவனங்களை வாங்கியதுடன், கியூப்26, நெஸ்ட் அவே மற்றும் பிளாக் பக் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேப் போன்று 2016 செப்டம்பர் முதல் 160 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்கள் பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் அன்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஐடியா..!
10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!


Click it and Unblock the Notifications