பெங்களுரூ: இந்தியாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2 வருடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட புதிய மதுபானங்கள் சந்தையில் இறங்கியுள்ளது.
பொதுவாக மதுபானங்களில் ஸ்காச் -க்கு தனி இடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதன் விலை அதிகமானலும் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சி அடைத்து வருகிறது.

இந்நிலையில் 2013ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் ஸ்காச் விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
2013ஆம் ஆண்டுக்குப் பின் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகளவிலான ஸ்காச் பாட்டில்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஸ்காச் மதுபானத்திற்க இந்தியாவில் தனி இடம் உருவாகியுள்ளது.

உலகளவில் ஸ்காச் விற்பனையின் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்றால் நீங்களே பாத்துக்கோங்க. எந்த அளவிற்கு இந்தியர்கள் ஸ்காச் மீது காதல் கொண்டுள்ளார்கள் என்று.
இந்நிலையில் வருடத்திற்கு 9.09 கோடி ஸ்காச் பாட்டில்களை இறக்குமதி செய்து பிரான்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இதைத் தொடர்ந்து அமெரிக்கா 5.31 கோடி பாட்டில்கள், 3வது இடத்தில் நம் இந்தியா 4.10 கோடி பாட்டிகள் இறக்குமதி செய்து அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications