சென்னை: இந்தியா உலக வங்கியில் ஒருபக்கம் கடன் வாங்கி வரும் நிலையில் இந்தியர்கள் எந்தக் கடன்களை எல்லாம் வாங்கி உள்ளார்கள் மற்றும் எந்த மாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவு சிறு கடன் பெற்றுள்ளார்கள் என்பது பற்றி இங்குப் பார்ப்போம்.
எந்தக் கடன் எவ்வளவு வாங்கி உள்ளார்கள்?
நகை, சொத்து போன்ற அடமானக் கடன்களாக 40%, வேளாண் கடனாக 12%, வாகனக் கடன் 7%, வணிகக் கடன் 5%, தனிநபர் கடன் 5%, தங்கக் கடன் 5%, இதரக் கடன் 26% என இந்தியர்கள் கடன் பெற்றுள்ளனர்.
சிறு கடன் பெற்றுள்ள டாப் 5 மாநிலங்கள்
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மக்கள் 18 சதவீதம் கடன் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் தமிழக மக்கள் 12 சதவீதமும், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் மக்கள் 10 சதவீதமும், கர்நாடகா மக்கள் 9 சதவீதமும், உத்திரப்பிரதேசம் மக்கள் 7 சதவீதமும், இதர மாநில மக்கள் 44% சிறு கடனும் பெற்றுள்ளனர்.
கடன் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்!
மேலே கூறியுள்ளதை போன்று கடன் வாங்கியுள்ளவர்கள் திருப்பி செலுத்த முடியாமல் வணிகக் கடன் 3.23%, வேளாண் கடன் 2.64%, தங்கக் கடன் 1.29%, தனிநபர் கடன், அடமானக் கடன் 0.56%, வாகனக் கடன் 0.55%, இதர கடன்கள் 2.31% எனச் சராசரியாக 1.52% கடன் தொகை சிக்கலில் திருப்ப செலுத்த முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.
2016 முதல் காலாண்டு
மேலே கூறிய விவரங்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டின் இறுதி நிலவரத்தைப் பொருத்து ஈக்விஃபேக்ஸ் நிறுவன வெளியிட்ட அறிக்கையில் இருந்து பெறப்பட்ட விவரங்களாகும்.
அதே போன்று 2016 முதல் காலாண்டுக்கான கடன் வளர்ச்சி இந்தியாவில் 6.5 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் இது அதிகபட்சம் தங்கம் மீதான கடனும், வாகனக் கடன்களுமே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பொன்று சென்ற ஆண்டு திருப்பி செலுத்த முடியாமல் சிக்கலில் உள்ள கடன்களாக இருந்த 1.52% சராசரி கடன் அளவு இந்தக் காலாண்டில் மட்டும் 0.8 புள்ளிகள் உயர்ந்து 1.60 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications