'இன்போசிஸ்' விஷால் சிக்காவின் 'ஜிரோ டிஸ்டன்ஸ்' திட்டம்.. ஊழியர்களுக்கு லாபமா..? நஷ்டமா..?

பெங்களுரூ: இந்திய மென்பொருள் துறையில் இன்போசிஸ் 2வது இடத்தில் இருந்தாலும், சந்தையில் இந்நிறுவனத்தின் தாக்கம் மிகவும் அதிகம்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா 2014ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் இணைந்து முதல் முறையாக அறிவித்த திட்டம் 'ஜிரோ டிஸ்டன்ஸ்'.

இந்த ஜிரோ டிஸ்டன்ஸ் திட்டத்தின் இணையும் ஊழியர்கள், பிராஜெக்ட் மேனேஜர்களுக்கு அதிகளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படுவதே இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பு. இதற்கு ஊழியர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்து.

தற்போது இத்திட்டம் இன்போசிஸ் நிறுவனத்தில் முழுமையாக அனைத்து மட்டங்கள் மற்றும் பிரிவுகளில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் நிறுவனத்திற்கு என்ன லாபம்..?

வாங்கப் பார்ப்போம்.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாக குழுவின் அதிரடி முடிவால் பல முக்கிய அதிகாரிகளின் வெளியேற்றத்தின் மத்தியில் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார் விஷால் சிக்கா.

விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் ஊழியர்களைச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கருத்தாக கொண்டு உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த 'ஜிரோ டிஸ்டன்ஸ்'.

 

 

மையக் கருத்து

மையக் கருத்து

இன்போசிஸ் நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் இடைவெளியை தங்களது பிராஜெக்ட் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் மூலம் குறைத்து அதிக வருவாய் மற்றும் புதிய வர்த்தகத்தை உருவாக்கும் திட்டம் தான் இந்த 'ஜிரோ டிஸ்டன்ஸ்'.

என்ன லாபம்

என்ன லாபம்

இத்திட்டத்தின் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் கையில் இருக்கும் ஒவ்வொரு பிராஜெக்டிலும் புதிய ஐடியாக்கள் மற்றும் மேம்பாடுகளை உருவாக்குவதும், இதன் மூலம் பல புதுமைகள் (Innovation) உருவாக்கி அதன் வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதே 'ஜிரோ டிஸ்டன்ஸ்' திட்டத்தின் நோக்கம்.

தற்போது இத்திட்டம் இன்போசிஸ் நிறுவனத்தில் செயல்பாட்டில் இருக்கும் 9,500 பிராஜெட்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

விற்பனை

விற்பனை

இதன் மூலம் சேல்ஸ் பிரிவு மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் இருக்கும் பிராஜெக்ட் மேனேஜர்களும் தங்களுக்கான ஒரு 'ஜிரோ டிஸ்டன்ஸ் டெம்பிலேட்-ஐ உருவாக்கித் தனி கணக்கைத் துவங்க முடியும் இதனால் வாடிக்கையாளர்களிடம் up-sell மற்றும் cross-sell பணிகளைச் செய்ய முடியும்.

இதற்கு இன்போசிஸ் ஊக்கத்தொகை அளிக்கும்.

 

கிளையின்ட் மைனிங்

கிளையின்ட் மைனிங்

தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதே இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய முக்கிய கருத்தாக விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் டாப் 10 வடிக்கையாளர்கள் ஐடி சேவைக்காக 1 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை செலவு செய்கிறது என்றால் இத்திட்டத்தின் மூலம் 25 மில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

 

சேல்ஸ் டீம்

சேல்ஸ் டீம்

இன்போசிஸ் நிறுவனத்தில் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனது விற்பனை பிரிவில் பணியாற்றுகின்றனர். ஆனால் இதற்கு 3 மடங்கு அதிகமாக பிராஜெட் மேனேஜர்கள் உள்ளனர்.

இவர்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

 

ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ்

ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ்

'ஜிரோ டிஸ்டன்ஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ் திட்டத்தை விஷால் சிக்கா அறிமுகம் செய்தார்

இத்திட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பெஞ்ச்-இல் இருக்கும் ஊழியர்களை ஜிரோ டிஸ்டன்ஸ் திட்டத்திற்கான PoC தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம்.

 

பெஞ்ச் ஊழியர்கள்

பெஞ்ச் ஊழியர்கள்

30 சதவீத ஜிரோ டிஸ்டன்ஸ் டெம்பிலேட்களை பெஞ்ச்-இல் இருக்கும் ஊழியர்களை வைத்துத் தான் உருவாக்கப்பட்டது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

11,000 டெம்பிலேட்

11,000 டெம்பிலேட்

இதுவரை சுமார் 11,000 ஜிரோ டிஸ்டன்ஸ் டெம்பிலேட் தயாரிக்கப்பட்டு, அதில் 30-35 சதவீத டெம்பிலேட்கள் வாடிக்கையாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

ரவி குமார்

ரவி குமார்

டெம்பிலேட்-க்கான PoC தயாரிக்கம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்விதமான கட்டணத்தையும் பெறுவதில்லை, ஆனால் அந்த டெம்பிலேட் ஐடியா-வாக மாறும்போது, டெவலப் செய்யப்படும் போதும் கட்டணம் விதிக்கப்படும்.

இதனால் பெஞ்ச்-இல் இருக்கும் ஊழியர்கள் சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுவார்கள் எனத் தலைமை விநியோக அதிகாரி ரவி குமார் தெரிவித்தார்

 

இலக்கும்.. வெற்றியும்..

இலக்கும்.. வெற்றியும்..

ஜிரோ டிஸ்டன்ஸ் மற்றும் ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ் திட்டங்கள் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 60 சதவீத அதிக வருவாய் பெறும் இலக்கை அடுத்த 3 வருடத்தில் எட்டிவிடும்.

தற்போது ஒரு ஊழியருக்கு 50,000 டாலர் வருவாய் பெறும் இன்போசிஸ் அடுத்த 3 வருடத்தில் இதன் அளவை 60 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் இதன் அளவு 80,000 டாலராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லாபமா..? நஷ்டமா..?

லாபமா..? நஷ்டமா..?

பொதுவாக ஐடி ஊழியர்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது.. செய்யும் வேலைக்கு ஊக்க தொகை, பெஞ்ச் இருக்கும் போதும் ஜிரோ டிஸ்டன்ஸ் திட்டத்தின் வேலைகள் இருப்பதால் தங்களது வேலைக்கு உத்திரவாதம்.

PoC வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப்போன் பெஞ்ச்-இல் இருக்கும் ஊழியர்களுக்கு பம்பர் ஆஃபர்.

இத்திட்டத்தின் வாயிலாக பிராஜெட் மேனேஜெர்களுக்கு நிறுவனத்தில் கூடுதல் ஆளுமை தன்மை, மேலும் வாடிக்கையாளர்களிடம் ஒரு படி மேலே நின்று பேசும் உரிமை என பல்வேறு சாதகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

உங்கள் கருத்து என்ன..? 

ஸ்காச்.. ஸ்காச்..

ஸ்காச்.. ஸ்காச்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+