பாபா ராம்தேவ் அருளால் ‘போர்ப்ஸ்’ பணக்காரர்கள் பட்டியலில் ‘ஆச்சார்யா’.. யார் இவர்..?

மும்பை: பாபா ராம்தேவ் இந்தியாவில் பல துறைகளில் சர்ச்சகளுக்கு மத்தியில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துபவர். இவர் யோகா மற்றும் உடற்பயிற்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தனது சேவையை துவங்கி தற்போது மிகப்பெரிய சாமியாராக உருவெடுத்துள்ளது.

ஆனால் இவருக்கு நுகர்வோர் சந்தையில் பிஸ்னஸ் மேன் என்ற மறுபக்கமும் உண்டு. பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலி என்ன தெரியமா..?

இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.

ஆச்சார்யா பலகிருஷ்ணா

ஆச்சார்யா பலகிருஷ்ணா

பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர் அதவது கிட்டத்தட்ட 16,000 கோடி சொத்து மதிப்புடன் 48 வது இடத்தில் இடம்பெற்று உள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை இவரே வைத்துள்ளார் என்றும் அந்த ஆய்வற்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நுகர்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் மிக வேகமாகப் பதஞ்சலி நிறுவனம் வலரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்ற நிதி ஆண்டில் 5000 கோடி வருவாய் ஈட்டிய பதஞ்சலி நிறுவனம் 2017 ஆண்டு 10,000 கோடியை எட்ட இலக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவிற்கு பதஞ்சலி நிறுவனத்தில் எந்தப் பங்கும் இல்லை, ஹரித்வாரில் உள்ள தயாரிப்பு ஆலை மட்டும் இவருக்குச் சொந்தம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாபா ரம்தே தான் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 22.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 100 பேர் கொண்ட பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டு மற்றும் மூன்றாவது நிலை

இரண்டு மற்றும் மூன்றாவது நிலை

சன் பார்மா நிறுவனர் திலிப் ஷாங்வி 16.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், ஹிந்துஜா குழுமம் 15.2 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

விப்ரோவின் அசிம் பிரேம்ஜி

விப்ரோவின் அசிம் பிரேம்ஜி

மேலும் அதற்கு அடுத்த இடத்தில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிளிப்கார்ட் தலைவர்கள்

பிளிப்கார்ட் தலைவர்கள்

அதே நேரத்தில் சென்ற வருடம் இந்தப் பட்டியலில் இடம் பெற்ற பிளிப்கார்ட்டின் இணை தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+