வருமான வரித்துறையின் திடீர் 'ரெய்டு'.. ஹோட்டல், ரோட்டு கடைகளுக்கு 'செக்'..!

மும்பை: இந்திய வருமான துறை தனது வரி வசூல் இலக்கை அடைய வரி ஏய்ப்பு, வருமான வரி செலுத்தாவர்கள் என மத்திய மாநில அரசு கண்களில் படாத பல துறை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வருமான வரித்துறையின் வருமான அறிவிப்பு திட்டம் வெற்றியை இலக்கையை அடைய வேண்டும் என்பதன் நோக்கமாக இதுவரை செய்யாத பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.

இதன் மூலம் டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான வரி வருமான இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்படி எந்த இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தார்கள்.

செப்டம்பர் 30

செப்டம்பர் 30

IDS எனப்படும் இன்கம் டிக்லரேஷன் ஸ்கீம் திட்டத்தின் கடைசி நாள் செப்டம்பர் 30க்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு இத்திட்டத்தின் வெற்றியை காட்டுவதற்காக வருமான வரித்துறையினர் மும்பையில் சிறு தொழில், தெருஒர கடைகளில் ரெயிடு நடத்தியுள்ளனர்.

இந்திய வருமான வரித்துறையின் வரலாற்றில் இதுவரை செய்யாத முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதனால் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வரும் சிறு தொழில் மற்றும் தெருஒர கடைகள் தற்போது பீதியில் உள்ளது.

 

50 கடைகள்

50 கடைகள்

வருமான வரித்துறையினர் மும்பையில் மட்டும் 50 கடைகளில் சோதனையிட்டுள்ளனர் இதில், தானே பகுதியில் வாடா பாவ் கடைகள், காட்கோபார் பகுதியில் தோசா சென்டர்கள், அந்தேரி பகுதியில் ஸான்வெஜ் கடைகள், தென் மும்பை பகுதியில் பல ஜிலேபி கடைகள் அடங்கும்.

சோதனை செய்த பல கடைகளில் வரம்புக்கு மீறிய வருமானம் இருப்பதை கண்டுப்பிடிக்கப்படுள்ளதாகவும், கடை உரிமையாளர்களை அடுத்த சில தினத்திற்குள் IDS திட்டத்தின் கீழ் தங்களது உண்மையான வருமானத்தையும், இதுவரை கணக்கில் காட்டாமல் இருக்கும் கருப்பு பணம் குறித்த விபரங்களையும் சமர்பிக்கும் படியும் உத்திரவிட்டுள்ளனர்.

 

பிற இடங்களில்

பிற இடங்களில்

இதுமட்டும் அல்லாமல் கடந்த 10 நாட்களில் அகமதாபாத், டெல்லி மற்றும் கொலகத்தா பகுதிகளில் சுமார் 100 கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனைகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக சேகரித்த தகவல்கள் படி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

1 லட்சம் கடைகள்

1 லட்சம் கடைகள்

கடந்த 6 மாதங்களாக சேகரித்த தகவல்களில் மட்டும் அகமதாபாத், டெல்லி, மும்பை மற்றும் கொலகத்தா பகுதிகளில் மட்டும் சுமார் 1 லட்சம் கடைகள் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டவர்கள் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பை

டெல்லி மற்றும் மும்பை


வருவான வரித்துறையினர் டெல்லி மற்றும் மும்பை பகுதிக்கு மட்டும் 2,500 கோடி ரூபாய் வரி வசூல் இலக்கை நிர்ணயம் செய்யதுள்ளாத தகவல் கிடைத்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் சிறு வணிகள் நிறுவனங்களை, கடைகள், தெருஓர கடைகளில் அதிகளவில் தோனைகளும், ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

 

2 கோடி ரூபாய்

2 கோடி ரூபாய்

இதுவரை வருமான துறையினரை நேரடியாக சந்திக்காத இந்திய கடை உரிமையாளர்களிடம் இருந்த கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தனது செய்தி வந்துள்ளது என மும்பையில் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தெரிவித்துள்ளார்.

1000 இடத்தில் ரெய்டு

1000 இடத்தில் ரெய்டு

வருமான வரித்துறையின் வரி வசூல் இலக்கு, IDS திட்டத்தின் கடைசி நாளான செப்டம்பர் 30 நெருங்கும் நிலையில் அடுத்த 8 நாட்களுக்குள் சுமார் 1,000 கடைகளில் அதிரயாக சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை மும்பையில் ஒரு முக்கிய கவ் காலி பகுதிகளில் மட்டும் சுமார் 400 வருமான வரி துறை அதிகாரிகள் இத்தகைய சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இதேபோன்ற சோதனை மும்பையின் பிற பகுதிகள், டெல்லி, கொல்கத்தா பகுதிகளில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

தென் இந்தியா

தென் இந்தியா

அடுத்த சில வாரங்களில் இதேபோன்ற சோதனை மற்றும் ஆய்வுகள் சென்னை, மதுரை, போன்ற தமிழகத்தின் முக்கியமான பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அனைத்து கடை உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளவும்.

 

கண்டிப்பு

கண்டிப்பு

இதேபோன்ற கண்டிப்பான நடவடிக்களை வரி ஏய்ப்பு செய்து வரும் பெரும் புள்ளிகளிடம் காட்டினால் அடுத்த 6 மாதத்தில் இந்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தொகையை சேர்த்து விடலாம்.

சூப்பர் ஐடியா..!

10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+