லிங்க்டுஇன், உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை நெட்வொர்க்கில் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தொழில் விற்பன்னர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இப்போது வேலை வாய்ப்பு வலைத்தளங்களைத் தவிர்த்து லிங்க்டுஇன் மூலம் தங்களுக்குத் தகுந்த பணியாளர்களைத் தேடத் தொடங்கி விட்டன. அந்த அளவிற்கு லிங்க்டுஇன் தொழில்முறை நெட்வொர் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
சமீபத்தில் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் லிங்க்டுஇன் நிறுவனத்தைச் சுமார் 26 பில்லியன் டாலர் கொடுத்து இந்நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது.
தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் லிங்க்டுஇன் மூலம் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகளைப் பட்டியலிட்டுள்ளது.
மனு குமார் ஜெயின்
மனு குமார் ஜெயின் ஜியோமி நிறுவனத்தின் இந்திய நாட்டிற்கான நிறுவன மேலாளர் மற்றும் தலைவர் ஆவார். ஜெயின் மே 2014 முதல், சீனாவின் மிக முக்கிய நிறுவனமான மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஜியோமியில் பணியாற்றி வருகின்றார்.
ராஜன் ஆனந்தன்
ராஜன் ஆனந்தன், கூகிள் நிறுவனத்தில் தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவிற்கான துணைத் தலைவர் ஆவார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான, ஆனந்தன் 2011 ஆம் ஆண்டுக் கூகுள் இந்தியா நிறுவனத்தில் சேர்ந்தார்.
கிரிஷ் மாத்ருபூதம்
கிரிஷ் மாத்ருபூதம், ப்ரெஸ்டெஸ்க், ஒரு வாடிக்கையாளர் ஆதரவு மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
மாத்ருபூதம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ப்ரெஸ்டெஸ்க் நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றார்.
சுமன் போஸ்
சுமன் போஸ், சீமென்ஸ் தொழில் மென்பொருள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
போஸ் ஜாம்ஷெட்பூரில் உள்ள எக்ஸ்எல்ஆர்ஐ ல் நிதி மற்றும் மார்க்கெட்டிங் படித்த பின் ஆர்வார்ட் பிசினஸ் ஸ்கூலில் பொது மேலாண்மை பயின்றார். சீமன்ஸ் நிறுவனத்தில் சேருவதற்கு முன், அவர் டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் இந்திய நாட்டிற்கான இயக்குனராகப் பதவி வகித்தார்.
அபினவ் லால்
பட்டியலில் அடுத்த இடத்தில் அபினவ் லால் உள்ளார். இவர் ப்ராக்டோ, ஒரு சுகாதார ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CTO வாக உள்ளார்.
கர்நாடகா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறையில் பிடெக் பட்டம் பெற்ற இவர், 2008 ஆம் ஆண்டுத் தன் நண்பர்களுடன் இணைந்து ப்ராக்டோ நிறுவனத்தை நிறுவினார்.
அந்தோணி தாமஸ்
ஜி.இ. குளோபல் நிறுவனத்தின் குழு CIO வான அந்தோணி தாமஸ், நமது பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார். ஜி இ நிறுவனத்தில் இணையும் முன்னர் இவர் வோடபோன் இந்தியா நிறுவனத்தின் CIO வாக இருந்தார்.
அவர் சிட்டி மற்றும் இண்டெல்லி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
மேலும் தாமஸ் அவர்கள் ஏஞ்சல் நெட்வொர்க் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவராவார். இவர் இந்திய ஏஞ்சல் நெட்வொர்க் நிறுவனத்தின் ஒரு உறுப்பினர் ஆவார்.
ஹர்மீன் மேத்தா
இந்தப் பட்டியலில் உள்ள ஒரே பெண்ணான ஹர்மீன் மேத்தா, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உலக CIO வாக உள்ளார்.
குர்கானைச் சேர்ந்த இவர் நவம்பர் 2014 முதல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இணையும் முன்னர், ஹர்மீன் மேத்தா பி.பி.வி.ஏ, பாங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் மற்றும் எச்எஸ்பிசி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications