நாணய கொள்கை அமைப்பு: ரிசர்வ் வங்கி சார்பாக 3 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு..!

மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வட்டி விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இனி நாணய கொள்கை வடிவமைப்பில் மத்திய அரசும் ஈடுபடும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

இதன் படி ரிசர்வ் வங்கி சார்பில் மூவரும், மத்திய அரசு சார்பில் மூவரும் புதிதாக அமைக்கப்பட உள்ள நாணயை கொள்கை அமைப்பில் நியமிக்கப்படுவார்கள்.

இக்குழுவின் ஆலோசனைப் படியே இனி இந்தியாவில் வட்டி விகிதங்கள் முடிவு செய்யப்படும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து முடிவு செய்தது.

 ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

மத்திய அரசின் புதிய நாணய கொள்கை அமைப்பு அமைக்கும் முடிவிற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டார் முன்னாள் ரகுராம் ராஜன். ராஜன் பதவி விலகியுடன் இக்குழுவிற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் துரிதமாகச் செய்து வந்தது.

தற்போது ரிசர்வ் வங்கி சார்பில் இவ்வமைப்பில் இடம்பெறும் 3 பேர் கொண்ட பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நாணய கொள்கை அமைப்பில் ரிசர்வ் வங்கி சார்பாகக் கவர்னர் உர்ஜித் பட்டேல், துணை கவர்னர் மற்றும் நாணய கொள்கை அதிகாரி ஆர்.காந்தி, நிர்வாக இயக்குனர் எம்.டி.பத்ரா ஆகியோர் இந்தப் புதிய அமைப்பில் இடம் பெறுவார்கள்.

இதனுடன் பாமி துவா, சேட்டன் கட்டே மற்றும் ரவிந்திரா தோலாகியா ஆகியோர் வெளி உறுப்பினர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

வெளி உறுப்பினர்கள்

வெளி உறுப்பினர்கள்

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைப்பில் இருக்கும் இந்தப் புதிய நாணய கொள்கை அமைப்பில் நியமிக்கப்பட்டுள்ள வெளி உறுப்பினர்கள் அடுத்த 4 வருடத்திற்குக் காலத்திற்கு மட்டுமே இக்குழுவில் பணியாற்றுவார்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆமா.. இவர்களின் வேலை என்ன..?

 

 

என்ன வேலை..?

என்ன வேலை..?

வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யத் தேவைப்படும் அனைத்துத் தகவல்கள், கணக்கீடுகள் என அனைத்துப் பணிகளையும் இந்த மூன்று பேரும் செய்வார்கள். இவர்கள் அளிக்கும் தகவல்கள் படி தான் நாணய கொள்கை அமைப்பு வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்.

மத்திய அரசு

மத்திய அரசு

புதிய நாணய கொள்கை அமைப்பில் ரிசர்வ் வங்கி சார்பாக அமரப்போகும் அதிகாரிகளை வெளியிடப்பட்ட நிலையில் அரசு சார்பாக வரப்போகும் அதிகாரிகளின் பட்டியலை இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆக்டோபர் 4

ஆக்டோபர் 4

அடுத்த மாதம் 4ஆம் தேதி நடக்க இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் நாணய கொள்கை அமைப்பு தான் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்.

இதற்கான பணிகளை வெளி உறுப்பினர்கள் தொடங்கிவிட்டனர்.

 

 

நாணய கொள்கை அமைப்பு

நாணய கொள்கை அமைப்பு

நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தை 2-6 சதவீதத்திற்குக் கொண்டு வரும் முக்கியமான பொறுப்பு நாணய கொள்கை அமைப்பு சார்ந்துள்ளது. இதே பணியைத் தான் ரகுராம் ராஜன் செவ்வெனச் செய்தார்.

ஆனால் தனது பதவிக் காலத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்த ரகுராம் ராஜன் தற்போது ராஜினாமா செய்த காரணத்தால் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+