ஹைதராபாத்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் விதமாக ஹைதராபாத் நகரத்தைத் தலைமையாக கொண்டு இருக்கும் ஸ்டார்ப்-அப் நிறுவனமான டுபில்ஜம்ப் நிறுவனத்தை ஆப்பிள் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்தக் கைப்பற்றும் முயற்சி சற்று வித்தியாசமானது.
வித்தியாசம்
பொதுவாக ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்குவது என்றால் மொத்த நிறுவனத்தையோ, சில பகுதியையோ அல்லது சில சேவைகளையும், அல்லது வர்த்தகத்தையோ கைப்பற்றும்.
டுலிப்ஜம்ப் நிறுவனம்
ஆனால் ஆப்பிள், டுலிப்ஜம்ப் நிறுவனத்தின் சேவை, வர்த்தகம், முக்கிய பிரிவு என எதையும் கைப்பற்றாமல் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 16 ஊழியர்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. வர்த்தக சந்தையில் இதனை acqui-hire என்று அழைப்பார்கள்.
20 மில்லியன் அமெரிக்க டாலர்
இதன் மூலம் டுலிப்ஜம்ப் நிறுவனத்தின் 16 ஊழியர்கள் தற்போது ஆப்பிள் நிறுவன ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். இதற்காக ஆப்பிள் டுபில்ஜம்ப் நிறுவனத்திற்குக் கொடுத்த தொகை 20 மில்லியன் அமெரிக்க டாலர். இத்தொகை ஒரு வருடத்திற்கானது.
சம்பளம்
ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை மட்டும் கைப்பற்றும் போது இந்த டீல் மதிப்பை ஊழியர்கள் சில வருடங்களின் சம்பளத்தை வைத்துக் கணக்கிடப்படும்.
லாபம்.. சுபம்..
தற்போது இந்நிறுவனத்தில் பணியாற்றும் 16 ஊழியர்களின் ஒரு வருடச் சம்பளம் 4 மில்லியன் டாலராக இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் இவர்களுக்கு 20 மில்லியன் டாலர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் டுலிப்ஜம்ப் நிறுவனத்திற்கு லாபம் தான்.
முதல் நிறுவனம்
ஐபோன் தயாரிக்கும் இந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கைப்பற்றும் முதல் நிறுவனம் இந்தி டுலிப்ஜம்ப்.
அது மட்டும் அல்லாமல் செயற்கை நுண்ணறிவு பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் சுமார் டுலிப்ஜம்ப் உடன் சேர்த்து சுமார் 3 நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
போட்டி..
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையான SIRI-க்கு போட்டியாகச் சந்தையில் கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட் ஆகியவை இறங்கியுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறவும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்க ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications