இந்தியாவால் சீன மக்களுக்கு வேலை வாய்ப்பு பாதிப்பு - அறிக்கை

இந்தியாவில் தொழில் துவங்குவதால் வேலை வாய்ப்பை பற்றி சீனர்கள் கவலைப் பட வேண்டும் என்று பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அன்மையில் ஹவாய் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை துவங்க உள்ள நிலையில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவினால் சீனர்களின் வேலை வாய்ப்பு குறையும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் க்ளோபல் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இது பற்றி செய்தி வெளியாகி இருப்பது கொடுக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

பெரும்பாலான சீன நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் அசெம்ப்ளி பிரிவுகளை இந்தியாவில் துவங்கி வருகின்றன. இதனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பெரும் பொருளாதார போட்டி நிகழ்ந்து வருகிறது.

சில காலமாக பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் தங்கலது தொழிற்சாலைகளைத் துவங்கி உள்ள நிலையில் எவ்வளவு பெருக்கு வேலை வாய்ப்பு குறையும் என்று சீனா கணக்கிடவில்லை என்று கூறுகின்றது.

 

வன்பொருள் தயாரிப்பு

வன்பொருள் தயாரிப்பு

சீனாவிற்கு அடுத்த வன்பொருள் தயாரிப்பு நிலையமாக இந்தியா உருவாகி வரும் நிலையில் சீனாவால் இந்தப் போட்டியை எதிர்கொள்ள இயலாது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இன்னொரு செய்தியில் சீனாவின் முதலீடுகள்
இந்தியாவில் அதிகரித்துவருகின்றன எனவே சீன நிறுவனங்கள் இந்தியா மற்றும் அதன் தொழிலாளர்கள் சட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

காரணம்

காரணம்

இந்தியாவில் உள்ள நிலையான அரசியல், சரியான வளர்ச்சி, பெரும் மக்கள் தொகை, குறைவான தொழிலாளர்கள் ஊதியம் போன்றவை பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தூண்டுகிறது.

நேரடி முதலீடுகள்

நேரடி முதலீடுகள்

அவ்வாறு இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேரடியாக முதலீடுகளைப் பெறும் 13 நாடுகளில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆச்சர்யம் படும் விதமாகப் பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பெறும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+