இன்றைய இளைஞர்களிடம் நாம் பல மாற்றங்களைப் பார்த்து வருகிறோம். சில மாற்றங்கள் பலருக்கு கவலை அளித்தாலும், சில மாற்றங்கள் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
20 வருடங்களுக்கு முன்பு ஏதாவது ஒரு வேலை செய்தாலும் போதும் என்று இருந்த மணப்பானமை மாறி ஐடி, உற்பத்தித் துறையை நோக்கி சென்னை போன்ற பெரு நிறுவனங்கள் பக்கம் இளைஞர்கள் கூட்டம் படையெடுக்கக் கிளம்பியது.
அதன் பின் வெளிநாடுகளுக்குப் படிக்கவும், வேலை செய்யவும் ஒரு கூட்டம் பறந்தது. ஆனால் தற்போது இந்திய இளைஞர்கள் கூட்டத்தின் நிலையும், மனப்போக்கும் என்ன..?
இன்றைய இளைஞர்கள்
மாத சம்பளம் வாங்கி வாங்கிச் சளித்துபோன இந்தியர்கள் மத்தியில் தற்போது முதலாளி கனவு உருவெடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த 3 வருடத்தில் கல்லூரிப்படிப்பை முடித்த 50 சதவீத மாணவர்கள் முதலாளி ஆகும் கனவை சுமந்து சுற்றி வருகின்றனர் என்றால நீங்கள் கண்டிப்பாக மறுக்க முடியாது.
வளர்ச்சி
இன்றைய இளைஞர்களின் தொழில்துவங்க வேண்டும் என்ற எண்ணம், நம் வீடுகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே மிகப்பெரிய வளர்ச்சி அடையச் செய்யும்.
உலகின் முன்னணி வர்த்தகச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் அடுத்த 10 வருட வளர்ச்சியில் இளைஞர்களுக்கு அதிகப் பங்கு உண்டு என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு வருகிறது.
பணமும்.. கனவு..
முதலாளி கனவு.. பார்ப்பதற்கு எல்லாம் அழகாக இருந்தாலும் ஒரு தொழில் துவங்குவதில் எவ்வளவும் கஷ்டம் இருக்கிறது என்பதை உணர்ந்தால் பேச முடியும்.
இதிலும் பணத்திற்காக இளைஞர்கள் படும்பாடு சொல்லவே வேண்டும். இதுவே ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் படித்திருந்தால் பணத்திற்காக எந்தக் கவலையும் நீங்கள் அடைய தேவையில்லை.
சூப்பர் ஐடியா..!
சரி.. இப்படிப் பணத்திற்காகக் கஷ்டப்படாமல், குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் மற்றும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற டக்கரான ஐடியா உங்களுக்காகத் தொகுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பள வேலையை விட்டு தள்ளுங்க.. 'முதலாளி' ஆக நல்ல வாய்ப்பு.
வீடியோ: Young Entrepreneurs Forum


Click it and Unblock the Notifications