அனில் அம்பானி-முகேஷ் அம்பானி கூட்டணியால் 'ஏர்டெல்' நிறுவனத்திற்கு வந்த சோதனையை பாருங்க..!

மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் அம்பானியின் குடும்பத்திலும் சரி, வர்த்தகத்திலும் சரி மிகப்பெரிய பிரிவினை ஏற்பட்டது.

இதன் காரணமாக முகேஷ் அம்பானி தலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப் வர்த்தகங்கள் சரி பாதியாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு குழுமத்திலும் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென் அம்பானிக்கு மகிப்பெரிய பங்கு உண்டு.

இப்படிக் குடுமத்திலும், வர்த்தகத்திலும் பல பிரிச்சனைகளைச் சந்தித்து வந்த அம்பானிகள் பிரிந்து 10 வருடம் ஆன நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதிதாக உருவாக்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தனது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.

ஏதற்காக இந்தத் திடீர் இணைப்பு..?

ரிலையன்ஸ் குழுமம்..

ரிலையன்ஸ் குழுமம்..

திருபாய் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் 500 ரூபாய்க்கு மொபைல் போன் அறிமுகப்படுத்தி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன் இயங்கி வந்தது. இன்றைய நாள் வரை இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் மொபைல் வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைய ரிலையன்ஸ் நிறுவனம் வாயிலாக அமைந்தது என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.

ஆனால் பல காரணங்களுக்காகவும், ஏர்டெல், ஏர்செல் போன்ற நிறுவனங்களின் போட்டியின் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்தது.

 

10 வருடப் பிரிவு

10 வருடப் பிரிவு

திருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட வர்த்தகப் பிரிவில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த டெலிகாம் வர்த்தகமும் காணாமல் போனது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

வர்த்தகப் பிரிவினைக்குப் பின் அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் டெலிகாம் வர்த்தகத்தைத் துவங்கினார் அனில் அம்பானி.

ஸ்திரமான நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகவேக பிராண்டுபேன்டு சேவை மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் சேவைகளை வழங்கி வந்தார். இதுமட்டும் அல்லாமல் தனது ஸ்திரமான நெட்வொர்க் அடிப்படையாக வைத்துப் பல நிறுவனங்களுக்கு டெலிகாம் மற்றும் இணையச் சேவையை வழங்கி வருகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.

 

வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்கள்

வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்கள்

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தற்போது 100 மில்லியன் வாடிக்கையாளர் மற்றும் 1 மில்லியன் விற்பனையாளர்களைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.

இணைப்பு

இணைப்பு

வர்த்தகம் மற்றும் குடும்பப் பிரிவினைக்குப் பின் ஜியோ வாயிலாக அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் இணைய உள்ளனர்.

ஜியோ, ஆர்காம்

ஜியோ, ஆர்காம்

அடுத்தச் சில மாதங்களில் ஜியோ மற்றும் ஆர்காம் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மெய்நிகராக (விர்ச்சுவல்) இணைய உள்ளது.

மெய்நிகர் இணைப்பு

மெய்நிகர் இணைப்பு

100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்காகவும், 1 மில்லியன் விற்பனையாளர்களுக்காகவும், எங்களது நிறுவன ஊழியர்களுக்காகவும், எங்களது கூட்டணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நன்மைக்காகவும் இந்த இணைப்பு ஏற்பட உள்ளது.

ஜியோ மற்றும் ஆர்காம் நிறுவனங்களின் மொத்த மெய்நிகர் இணைப்பு சில வாரங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அனில் அம்பானி தெரிவித்தார்.

 

பங்கீடு

பங்கீடு

இந்த இணைப்பின் மூலம் எங்களது ஸ்பெக்டரம், நெட்வொர்க், பைபர், டெலிகாம் டவர்கள், வாய்ஸ் சேவைகள் என அனைத்தும் ரிலையன்ஸ் ஜியோ உடன் பங்கீடு செய்யப்பட உள்ளது.

ஸ்பெக்டரம்

ஸ்பெக்டரம்

இரு நிறுவனங்களின் மெய்நிகர் இணைப்பின் முக்கியமானது ஜியோ மற்றும் ஆர்காம் மத்தியிலான ஸ்பெக்ட்ரம் பங்கீடு. இதனுடன் டெலிகாம் டவர் மற்றும் பைபர் நெட்வொர்க் பங்கீடு செய்வதற்காகவும் முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

நெட்வொர் பிரச்சனை

நெட்வொர் பிரச்சனை

இதனால் இந்தியா முழுவதும் டெலிகாம் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் ஜியோ மற்றும் ஆர்காம் கூட்டணி அமைப்பு அளிக்க முடியும். இதனுடன் ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் பிரச்சனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ஜியோ மற்றும் ஆர்காம் இணைப்பு குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, தான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யாருக்கு என்ன லாபம்..

யாருக்கு என்ன லாபம்..

தற்போது ஜியோ தனது இலவச சேவைகள் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று இருந்தாலும் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் சேவை விரிவாக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆர்காம் இணைப்பின் மூலம் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிகாம் டவர் நெட்வொர்க் சேவையை ஜியோ பயன்படுத்த முடியும்.

அதேபோல் ஜியோ நிறுவனம் பிராண்ட்பேன்ட் சேவை, நிறுவனங்களுக்கான மொத்த டெலிகாம் சேவை பிரிவுகளில் நுழைய முடியாத நிலையில் இருக்கும் போது ஆர்காம் இணைப்பின் மூலம் இதனைச் செய்ய முடியும்.

தற்போது ஆர்காம் நிறுவனத்தில் அனைத்துச் சேவைகள் இருந்தாலும் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஜியோ-விடம் இணைப்பதன் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஆர்காம் பெற முடியும்.

இது ஆர்காம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு, அதுமட்டும் அல்லாமல் ஆர்காம் நிறுவன பெயரில் இருக்கும் அதிகளவிலான கடனை அடைக்க முடியும்.

இந்த இணைப்பின் மூலம் இரு தரப்பிற்கும் லாபம் உண்டு.

 

ஏர்செல் இணைப்பு..

ஏர்செல் இணைப்பு..

அனில் அம்பானி தலைமையிலான ஆர்காம் நிறுவனம் தற்போது ஏர்செல் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டு வருவதால் மொபைல் சேவையின் மூலமும் அதிகளவிலான வருமானத்தைப் பார்க்க ஆர்காம் திட்டமிட்டுள்ளது.

கடனும்.. முதலீடும்..

கடனும்.. முதலீடும்..

ஜியோ மற்றும் ஏர்செல் நிறுவனங்களுடன் ஆர்காம் இணையத் திட்டமிட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு 20,000 கோடி ரூபாய் நிதி ஆர்காம் நிறுவனத்திற்குத் தேவை.

தற்போது ஆர்காம் நிறுவனத்திற்குச் சுமார் 42,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது.

இதனுடன் ஏர்செல் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 20,000 கோடி ரூபாய் கடனில் 6000 கோடி ரூபாய் தொகையை உடனடியாகத் தொலைத்தொடர்பு துறைக்குச் செலுத்தவும், மீதமுள்ள 14,000 கோடி ரூபாய் கடன் நீண்ட கால அடிப்படையில் கடனை முழுமையாகத் தீர்க்க திட்டமிட்டுள்ளது ஆர்காம்.

 

 

 டவர் விற்பனை

டவர் விற்பனை

அதேபோல் ஆர்காம் நிறுவனம் தனது சில பகுதிகளில் இருக்கும் டவர் வர்த்தகத்தை 16,500-19,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப் பூருக்பீல்டு நிறுவனத்திடம் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

யாருக்கு ஆபத்து..

யாருக்கு ஆபத்து..

இந்திய சந்தையில் ஜியோ-வின் அறிமுகம் செய்த சில நாட்களிலேயே நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகியவை ஆட்டம் கண்ட நிலையில் ஆர்காம் நிறுவனத்தின் மெய்நிகர் இணைப்பில் அடுத்தச் சில மாதங்களில் ஜியோ-ஆர்காம் கூட்டணி இந்திய சந்தையில் நிலையான வர்த்தகத்தை மற்றும் நெட்வொர்க்-யும் பெற்று முதன்மை நிறுவனமாக உருவெடுக்க உள்ளது.

ஜியோ-ஆர்காம் கூட்டணியில் ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் சேவையும் இணைய உள்ளதால் இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

 

ரகசிய காதலி

ரகசிய காதலி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+