இந்தியாவில் எத்தனை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன தெரியுமா..?

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் கீழ் 3.61 கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.

அதில் எத்தனை நிறுவனங்கள் கிராமங்களில், நகரங்களில் உள்ளன, பெண்கள் எத்தனை நிறுவனங்கள் நடத்தி வருகின்றன என்ற விரிவான விவரங்களை நாம் இங்கு பார்ப்போம்.

மொத்த நிறுவனங்கள்

மொத்த நிறுவனங்கள்

இந்தியாவில் மொத்தம் 3.61 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன, அதில் கிரமங்களில் இருந்து 2 கோடி நிறுவனங்களும், நகரங்களில் இருந்து 1.61 கோடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள்

பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள்

இந்த நிறுவனங்களில் 15.64 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள்ன. ஆனால் 3.46 கோடி நிறுவனங்கள் பதிவு செய்ப்படாமல் இயங்கி வருகின்றன என்றும் கூரப்படுகிறது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு வழங்குவதில் சிறு, குரு நிறுவனங்களும் ஓர் அளவுக்கு பங்காற்றி வருகின்றன. அதில் ஆண்கள் 6.84 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1.20 கோடி பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிறுவனங்களின் வகைகள்

நிறுவனங்களின் வகைகள்

இதில் 3.41 கோடி நிறுவனங்களும் தனி உரிமை பெற்று இயங்கி வருவதாகவும், கூட்டாண்மை நிறுவனங்களாக 4.28 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், தனியார் நிறுவனங்களாக 0.49 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், கூட்டுறவு நிறுவனங்களாக 1.21 லட்சம் இயங்கி வருவதாகவும் பிற முறைகளில் 8.09 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் நடத்தும் நிறுவனங்கள்

பெண்கள் நடத்தும் நிறுவனங்கள்

பெண்கள் 1.20 கோடி பேர் மட்டுமே சிறு, குரு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று இருந்தாலும் 26.6 லட்சம் நிறுவனங்களை இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கூறப்பட்டுள்ள ஆதாரங்கள் அமைத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் 2015-2016 நிதி ஆண்டிற்கான அறிக்கையில் இருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+