சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சி மசாலா மற்றும் உணவு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஆச்சி ஆப்பக்கடை மீது 'ஆச்சி" என்ற பெயருக்கான டிரேட் மார்க் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
ஆச்சி நிறுவனம்
இந்த வழக்கைத் தொடர்ந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சி நிறுவனம் 1995 ஆம் ஆண்டு முதல் ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் ஃபூட்ஸ் பெயருக்கான உரிமத்தை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த பெயரில் அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கான உரிமத்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
ஆச்சி ஆப்பக் கடை
ஆனால் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ராஜூ காலிதாஸ் என்பவர் ஆச்சி ஆப்பக் கடை என்ற பெயரில் உணவகம் ஒன்றைத் துவங்கி உள்ளார்.
ஆச்சி நிறுவனம் என்ற பெயரில் துவங்கியது மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் லோகோ, போன்றவற்றையும் அப்படியே ஆச்சி ஆப்பக் கடையின் விளம்பரத்திலும் பயன்படுத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆச்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்து அதற்கான விசாரனை நடை பெற்று வந்தது.
நிறைய வேறுபாடுகள்
இந்நிலையில் ஆச்சி மசாலா மற்றும் ஆச்சி உணவகம் இரண்டும் வெவ்வேறு பொருட்கள் விற்பனை செய்கின்றது, ஆச்சி என்பது பொதுவான பெயர், இரண்டு நிறுவனத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று எதிர்தரப்பின் வாதம் வைக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆச்சி ஆப்பக் கடை என்னும் பெயருக்கான உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
முதல் வழக்கு அல்ல
இது போன்ற வழக்குகளை ஆச்சி நிறுவனம் தொடர்வது முதல் முறை அல்ல. இதேப் போன்று பலமுறை நேர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு ஆச்சி கார்கோ என்ற பெயருக்கு எதிராகவும் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அப்போது இந்த வழக்கை ‘ஆச்சி' என்றால் ‘பாட்டி' இது பொதுவான பெயரே என்று ஆச்சி மசாலாவின் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
ஆச்சர்யமாக அமெரிக்காவில் நடந்த இந்த வழக்கிலும் ‘ஆச்சி' என்றால் ‘பாட்டி' இது பொதுவான பெயரே என்ற விவாதத்திற்கு எதிர்மறையான தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications