புகை பிடித்தல் உடல் நலத்திற்கு மட்டும் கேடு அல்ல உங்களது பாக்கெட்டையும் ஓட்டை போட்டு விடும்.
ஒவ்வொரு நாளும் சிகரெட் வாங்கிப் பிடிப்பதை நிறுத்தினால் நான் என்ன சேமிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்..?
மாதத்திற்கு 3,900 ரூபாய்
25 வயதான புகை பழக்கம் உள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 13 ரூபாய் 1 சிகரெட் விலையில் 10 சிக்ரெட் பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு 130 ரூபாய் மாதத்திற்கு 3,900 ரூபாய்.
1.27 கோடி செலவு
இப்படி நீங்கள் புகை பிடித்து வரும் போது 10 சதவீதம் வரை சிக்ரெட்டின் விலை உயர்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் 60 வயதாகும் போது 1.27 கோடி நீங்கள் செலவு செய்திருப்பீர்கள்.
இந்தப் பனத்தை நீங்கள் 10 சதவீதம் வரை லாபம் அளிக்கும் முதலீடு திட்டங்களில் சேமித்து வந்தால் 60 வயதாகும் போது இதுவே 3.37 கோடியாகிவிடும்.
இன்சூரன்ஸ்
மேலும் புகை பழக்கத்தில் உள்ளவர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பீரிமியம் தொகை புகை பழக்கம் இல்லாதவர்களை விட அதிகம் செலுத்த வேண்டும்.
40 முதல் 60 சதவீதம் அதிகம்
வயது மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பொருத்து டர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பீரிமியம் 40 முதல் 60 சதவீதம் வரை புகை பழக்கம் இல்லாதவர்களை விட அதிகம் செலுத்த வேண்டி வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புகைப் பழக்கத்திற்கு மிகவும் அடிமையாக இருந்தால் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவற்றை பெற இயலாமலும் போகலாம்.


Click it and Unblock the Notifications