இந்திய உற்பத்தித் துறையில் புதிய ஆர்டர்கள் மற்றும் விற்பனை அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய தொழிற்துறையில் உற்பத்தியின் அளவுகள் தொடர்ந்து 9 மாதங்களாக உயர்ந்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தை விடவும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் குறைவாகவே இருந்தாலும் தொடர்ந்து உயர்வு பாதையில் உள்ளது இந்திய சந்தைக்குச் சாதமாகும்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் இருமாத நாணயக்கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் வட்டி குறைப்பு செய்வதற்கான அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது செப்டம்பர் மாத தொழிற்துறை உற்பத்தி அளவுகள்.

நிக்கி இந்தியா-வின் உற்பத்தி விற்பனை மேலாண்மை குறியீடு (PMI) அளவு செப்டம்பர் மாதத்தில் 52.1ஆக உள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இதன் அளவு 52.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக PMI குறியீட்டின் அளவு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் நாட்டின் உற்பத்தித் துறை உயர்வு பாதையில் இருக்கிறது என்பது பொருள்.
செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு இக்காலகட்டத்தில் இந்தியாவில் புதிய தொழில் துவக்கத்தின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது முக்கியக் காரணமாக இருக்கிறது என நிக்கி இந்தியாவின் பிஎம்ஐ அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இக்காலகட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அதிகளவிலான உற்பத்திக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனுடன் விற்பனையின் அளவும் செப்டம்பர் காலத்தில் சிறப்பாக இருந்தது எனவும், ஆனால் நீண்டகால நோக்கத்தில் இதன் வளர்ச்சி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications