'ரபேல்' பைட்ர் ஜெட்-ஐ தயாரிக்க பிரான்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி.. அனில் அம்பானியின் புதிய திட்டம்..!

மும்பை: இந்தியாவில் போர் காலத்தில் பயன்படுத்தும் ரபேல் பைடர் ஜெட் விமானங்களைத் தயாரிக்க அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குரூப் பிரான்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதன் மூலம் இனி உலக நாடுகளில் பயன்படுத்தும் அதிநவீன பைடர் ஜெட் விமானங்களை இந்தியாவிலேயே குறைந்த செலவில் தயாரிக்க முடியும். அது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தயாரிக்கும் பைடர் ஜெட்களை உலக நாடுகளுக்கும் விற்பனை செய்ய முடியும், இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வர்த்தகத்தை அடையும்.

சமீபத்தில் இந்தியா 36 'ரபேல்' பைட்ர் ஜெட் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நிறுவனம்

பிரான்ஸ் நிறுவனம்

பிரான்ஸ் நாட்டில் விமானங்களைத் தயாரிப்பதில் முன்னணியாக இருக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவிற்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான 36 'ரபேல்' பைட்ர் ஜெட் விமானங்களை அளிக்க ஒப்புக்கொண்டது. இதில் 50 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

இதன் மூலம் இந்தியாவிடம் இதுவரை இல்லாத போர் விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற உள்ளது.

 

புதிய கூட்டணி..

புதிய கூட்டணி..

இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இனி ஏரோஸ்டக்சர்ஸ், எலக்ட்ரானிக் மற்றும் என்ஜின்-களைத் தயாரிப்பதிலும், வடிவமைப்பிலும் ஈடுபட உள்ளது.

30,000 கோடி ரூபாய்

30,000 கோடி ரூபாய்

மத்திய அரசின் 36 'ரபேல்' பைட்ர் ஜெட் விமானங்களை வாங்கும் திட்டத்தின் வாயிலாக, டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் ரிலையன்ஸ் குரூப் கூட்டணி வைத்தன் மூலம் அனில் அம்பானி 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த வர்த்தகத்தில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் இத்தகைய பெரும் தொகை மதிப்புடைய திட்டத்தைக் கைப்பற்றியதில்லை.

 

 நாக்பூர்

நாக்பூர்

இத்திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) நாக்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

அடுத்த 2 மாதத்தில் இப்பகுதியில் போர் விமானங்கள் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும் அடுத்த 12 மாதங்களில் முழுஅளவிலான தயாரிப்புப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இப்புதிய கூட்டணியின் ஒரு பகுதியாக இந்தியாவில் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் IDDM திட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

இணைப்பு..

இணைப்பு..

டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பணிகளில் பல சிறு, குறு நிறுவனங்களையும் ரிலையன்ஸ் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனால் என்ஜின் தயாரிப்புத் துறையில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

 

அனில் அம்பானி

அனில் அம்பானி

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடனான ரிலையன்ஸ் குரூப்-இன் கூட்டணி, இந்திய ஏரோஸ்பேஸ் துறை மற்றும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி திட்டமாக அமையும் என ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.

வாசகர் ஸ்பெஷல்

வாசகர் ஸ்பெஷல்

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+