விஷால் சிக்காவின் 72 கோடி சம்பளத்திற்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா..!

இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி நிறுவனங்களின் தலைவர்களை விடவும் அதிக சம்பளம் கொடுத்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் இது தான்.

சென்னை: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.டி.ஷிபுலால் சீஇஓ பதிவியில் ஓய்வு பெற்ற பின் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தச் சீஇஓ யார் என்பதில் மிகப்பெரிய பிரச்சனை வந்தது.

அனைத்துத் தரப்பினரும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருக்கும் முக்கிய அதிகாரியே அடுத்தச் சீஇஓவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்போசிஸ் தலைமை நிர்வாகக் குழு வெளியில் இருந்து புதிதாக ஒருவரை சீஇஓ-வாக நியமிக்கத் திட்டமிட்டது.

இதனால் இன்போசிஸ் நிர்வாக மட்டத்திலும் சரி, ஊழியர்கள் மட்டத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சனைகள் வெடித்தது. இதன் மத்தியில் SAP நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான விஷால் சிக்கா மிகப்பெரிய சம்பளத்துடன் சீஇஓவாக நியமிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டில் விஷால் சிக்காவிற்கு இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகம் அவரது சம்பளத்தை 72 கோடி ரூபாயாக உயர்ந்தியது. இந்தியாவில் எந்த ஒரு நிறுவனத்தின் சீஇஓவும் பெறாத தொகையை இன்போசிஸ் அளிக்க என்ன காரணம்.?

இன்போசிஸ்

இன்போசிஸ்

நாட்டின் 2வது பெரிய மென்பொருள் நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் 2021ஆம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர் வருவாய் பெறும் நிறுவனமாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் படியாகவே சர்வதேச சந்தையில் 20 பில்லியன் டாலர் வருவாய் பெறும் ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையாக விஷால் சிக்காவின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

வருவாய்

வருவாய்

20 பில்லியன் டாலர் வருவாய் பெறுவது மட்டும் அல்லாமல் ஒரு ஊழியர் மூலம் இன்போசிஸ் வருடத்திற்குச் சுமார் 80,000 டாலர் வருமான பெற திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடையவே நிர்வாக இயக்குனர்களுக்கு, விஷால் சிக்காவிற்கும் அதிகளவிலான சம்பளத்தையும் நிறுவனப் பங்குகளை அளித்து வருகிறது.

 

தற்போதைய நிலை..

தற்போதைய நிலை..

இன்போசிஸ் நிறுவனம் மார்ச் 2016ஆம் முடிந்த நிதியாண்டில் 9.5 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது. அதேபோல் ஒரு ஊழியர் வருடத்திற்குச் சராசரியாக 50,700 டாலர் வருமானத்தை அளித்து வருகின்றனர்.

72 கோடி ரூபாய் சம்பளம்

72 கோடி ரூபாய் சம்பளம்

20 பில்லியன் டாலர் வருவாய் மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தின் படியே இன்போசிஸ் நிருவாகம் விஷால் சிக்காவிற்குச் சுமார் 72 கோடி ரூபாய் (போனஸ், பங்குகள் அனைத்தும் அடக்கம்) சம்பளத்தை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. 'காசுக்கு ஏத்தப் பணியாரம்.'

விப்ரோ

விப்ரோ

இதே நோக்குடன் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான விப்ரோ 15 பில்லியன் டாலர் வருவாய் இலக்குடன் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான அபித் அலி நீமுச்வாலா-வை தனது நிறுவனத்தில் நியமித்தது.

இதன் பின்னர் நீமுச்வாலா அதிகச் சம்பள தொகையுடன் விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

மார்ச் 2016ஆம் ஆண்டு முடிந்த நிதியாண்டில் நாட்டின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான டிசிஎஸ் 16.54 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலர் இலக்குடன் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான் சந்திரசேகரன் ஒட துவங்கியுள்ளார்.

விஷால் சிக்கா மாஸ்டர் பிளான்..!

விஷால் சிக்கா மாஸ்டர் பிளான்..!

இன்போசிஸ் நிர்வாகத்தின் 20 பில்லியன் டாலர் இலக்கை அடைய முதல்கட்டமாக ஒரே நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ்-ஐ சுமார் 12-15 தனித்தனி நிறுவனங்களாக உடைக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால் சிக்கா.

இத்திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தற்போது பிரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

 

தனித்தனி டார்கெட்

தனித்தனி டார்கெட்

உடைக்கப்படும் தனித்தனி நிறுவனங்களுக்கு 500-700 மில்லியன் டாலர் வர்த்தக இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி ஒவ்வொரு நிறுவனங்களுக்குத் தனி விற்பனை பிரிவு தலைவர்கள், லாப மற்றும் நஷ்ட இலக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

4 பிரிவுகள்

4 பிரிவுகள்

தற்போது இன்போசிஸ் நிறுவனம் BFSI (3 பில்லியன் டாலர் வருவாய்), ரிடைல் மற்றும் லைப் சையின்ஸ் (2.3 பில்லியன் டாலர் வருவாய்), உற்பத்தி மற்றும் ஹை-டெக் ( 2.2 பில்லியன் டாலர் வருவாய்), எனர்ஜி மற்றும் யுடிலிட்டி, கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் (1.9 பில்லியன் டாலர் வருவாய்) என 4 பிரிவுகளாக உள்ளது.

இப்பிரிவுகள் தற்போது 12-15 தனித்தனி பிரிவுகளாகப் பரிக்கப்பட உள்ளது.

 

நிர்வாகத் தலைவர்கள்

நிர்வாகத் தலைவர்கள்

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது இருக்கும் 4 தனிப் பிரிவுகள் சன்தீப் டட்லானி, மோஹித் ஜோஷி, ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரவி குமார் ஆகியோ தலைமையின் கீழ் இயங்கி வருகிறது.

நிறுவனத்தின் பிரிவிற்குப் பின்னர், இவர்கள் கீழ் சில தனிப் பிரிவுகள் இருக்கும். யாருக்கு எந்தெந்த எத்தனை பிரிவுகள் தலைமை வகுப்பார்கள் என அக்டோபர் மாதத்திற்குள் இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்யும்.

 

'ஜிரோ டிஸ்டன்ஸ்'

'ஜிரோ டிஸ்டன்ஸ்'

மையக் கருத்து இன்போசிஸ் நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் இடைவெளியை தங்களது பிராஜெக்ட் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் மூலம் குறைத்து அதிக வருவாய் மற்றும் புதிய வர்த்தகத்தை உருவாக்கும் திட்டம் தான் இந்த 'ஜிரோ டிஸ்டன்ஸ்'.

 என்ன லாபம்

என்ன லாபம்

இத்திட்டத்தின் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் கையில் இருக்கும் ஒவ்வொரு பிராஜெக்டிலும் புதிய ஐடியாக்கள் மற்றும் மேம்பாடுகளை உருவாக்குவதும், இதன் மூலம் பல புதுமைகள் (Innovation) உருவாக்கி அதன் வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதே 'ஜிரோ டிஸ்டன்ஸ்' திட்டத்தின் நோக்கம்.

தற்போது இத்திட்டம் இன்போசிஸ் நிறுவனத்தில் செயல்பாட்டில் இருக்கும் 9,500 பிராஜெட்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

விற்பனை

விற்பனை

இதன் மூலம் சேல்ஸ் பிரிவு மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் இருக்கும் பிராஜெக்ட் மேனேஜர்களும் தங்களுக்கான ஒரு 'ஜிரோ டிஸ்டன்ஸ் டெம்பிலேட்-ஐ உருவாக்கித் தனிக் கணக்கைத் துவங்க முடியும் இதனால் வாடிக்கையாளர்களிடம் up-sell மற்றும் cross-sell பணிகளைச் செய்ய முடியும்.

இதற்கு இன்போசிஸ் ஊக்கத்தொகை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சேல்ஸ் டீம்

சேல்ஸ் டீம்

இன்போசிஸ் நிறுவனத்தில் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனது விற்பனை பிரிவில் பணியாற்றுகின்றனர். ஆனால் இதற்கு 3 மடங்கு அதிகமாகப் பிராஜெட் மேனேஜர்கள் உள்ளனர்.

இவர்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

 

ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ்

ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ்

'ஜிரோ டிஸ்டன்ஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ் திட்டத்தை விஷால் சிக்கா அறிமுகம் செய்தார்.

இத்திட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பெஞ்ச்-இல் இருக்கும் ஊழியர்களை ஜிரோ டிஸ்டன்ஸ் திட்டத்திற்கான PoC தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம்.

 

 

இலக்கும்.. வெற்றியும்..

இலக்கும்.. வெற்றியும்..

ஜிரோ டிஸ்டன்ஸ் மற்றும் ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ் திட்டங்கள் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 60 சதவீத அதிக வருவாய் பெறும் இலக்கை அடுத்த 3 வருடத்தில் எட்டிவிடும்.

தற்போது ஒரு ஊழியருக்கு 50,000 டாலர் வருவாய் பெறும் இன்போசிஸ் அடுத்த 3 வருடத்தில் இதன் அளவை 60 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் இதன் அளவு 80,000 டாலராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வருவாய் இலக்கை நோக்கி 2021

வருவாய் இலக்கை நோக்கி 2021

இன்போசிஸ் முழுமையான செயல்பட்டுக்குக் கொண்டு வரும் ஜிரோ டிஸ்டன்ஸ் மற்றும் ஜிரோ பெஞ்ச் இனிஷியேடிவ் திட்டங்கள் மூலம், 15 தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் மூலமும் இன்போசிஸ் 2021ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் வருவாயை எளிமையாக எட்டிவிடும்.

விஷால் சிக்காவிற்கு வருடத்திற்கு 72 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு இது தான் காரணம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+