பெங்களூரு: விழாக் கால சலுகைகளை இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாரி வழங்கி வரும் நிலையில் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் 1400 கோடி ரூபாய்க்குப் பொருட்களை விற்பனை செய்து பிளிப்கார்ட் சாதனை படைத்து உள்ளது.
ஸ்மார்போன்கள் பிரிவில் அதிகம் விற்பனை செய்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம் சென்ற வருடம் 2015 ஆம் ஆண்டின் பிக் பில்லியன் டேவில் ஐந்து நாட்களிலும் சேர்த்து 2,000 கோடிக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சாதனை
100 மில்லியன் பயனர்களை அன்மையில் பெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் இது குறித்து தெரிவிக்கையில் இது ஒரு வரலாற்றுச் சாதனை என்று கூறியுள்ளார்.
ஐந்து மடங்கு டிராஃபிக்
ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பில்லியன் டே விற்பனையைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்திற்கு வழக்கத்தை விட ஐந்து மடங்கு டிராஃபிக் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர விற்பனை மேலாவில் வாடிக்கையாளர்களுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விற்பதற்காக பல முன் ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளன.
ஓர் ஆண்டு முன்பு முதல்
2015 ஆம் ஆண்டும் அக்டோபர் 17-18 விழாக் கால விற்பனை முடிவுற்றதில் இருந்தே இந்த ஆண்டு விற்பனைக்கான பணிகளைத் துவங்கியதாகப் பொருட்கள் வகையின் நிர்வாகி மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் நிறுவனத்திலும் இதேப் போன்று ட்ராபிக், பதிவேற்றும் நேரம், இஞ்சினியரிங் டெஸ்டிங் போன்ற பணியில் ஈடுபட்டுவந்துள்ளதாக ஸ்மிரித்தி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
போர்க்களம்
பெங்களூரில் செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்குப் போட்டியாக அமேசான் நிறுவனமும் தனது பிரிவினை பெங்களுரில் துவங்கி இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்களும் போர்க்களம் போன்று காட்சி அளித்துள்ளன.
முழு சுதந்திரம்
விற்பனை, மற்றும் பொருட்கள் பிரிவுகளில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், துறை சார்ந்த நிபுணர்கள் விற்பனையை கவனித்துக் கொண்டதாகவும் இதனால் பல புதிய பிரிவுகளில் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய முடிந்ததாக திவாரி தெரிவித்தார்.
இணைய வர்த்தகத்தில் சாதனை
விற்பனைக்காக வாடிக்கையாளர்களைக் கவர பெரும் அளவில் விளம்பரம் செய்யப்பட்டது ஆச்சர்யமா இருந்தது. 200 மில்லியன் டாலர்களுக்கு ஒரே நாளில் விற்பனை செய்துள்ளது இணைய வர்த்தகத்தில் மிகப் பெறும் சாதனை என்றும் டெக்னோபார்க் நிறுவன தலைவர் அரவிந் சிங்கால் கூறியுள்ளார்.
சந்தையின் பெறும் பகுதி
மேலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் சென்ற ஆண்டை விட 40 சதவீதம் வரை வளர்ச்சியைக் கண்டால் சந்தையின் பெறும் பகுதியை இவர்கள் கைப்பற்றியதாகவே இருக்கும் என்றும் கூறினார்.
இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பிரிவுகள்
இந்த ஆண்டு இணைய சில்லறை வணிகர்களும் வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாக 40 மில்லியன் பொருட்களை பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 2015 ஆம் ஆண்டை விட மூன்று மடங்க அதிகமாக 80 மில்லியன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications