888 ரூபாய் முதல் பயணம் செய்யலாம்: பயணிகளை கவர விமான நிறுவனங்களின் அதிரடி சலுகைகள்..!

சென்னை: விழாக் கால சலுகை, வருட கடைசி விற்பனை என விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் சலுகைகளை அறிவித்துள்ளன.

இங்கு நாம் ஏர் ஏசியா, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் அறிவித்துள்ள டிக்கெட் சலுகைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

ஏர் ஏசியா ஆஃபர்

ஏர் ஏசியா ஆஃபர்

பட்ஜெட் விலையில் விமான பயணம் அளித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் குறைந்தபட்சமாக டிக்கெட் உட்பட எல்லா கட்டணங்களுடனும் 899 ரூபாய் முதல் பயணம் செய்யலாம் அறிவித்துள்ளது.

சலுகை காலம்

சலுகை காலம்

ஏர் ஏசியாவின் அறிக்கை படி 2016 அக்டோபர் 16-ம் தேதி வரை 2016 அக்டோபர் 4 முதல் 2017 ஏப்ரல் 17 வரையிலான பயணங்களுக்கான டிக்கெட்களை புக் செய்யலாம்.

கவுஹாத்தி முதல் இம்பால் செல்வதற்கு 899 ரூபாயும், பெங்களூருவில் இருந்து கொச்சி செல்ல 999 ரூபாயும் கட்டணமாக ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

 

பிற வழித்தடங்கள்

பிற வழித்தடங்கள்

பெங்களூர்-கோவா செல்ல 1,199 ரூபாயும், பெங்களூர்- சண்டிகர் செல்ல 3,399 ரூபாயும், கோவா-ஹைதராபாத் செல்ல 1,799 ரூபாயும், ஜெய்ப்பூர்-பூனே செல்ல 2,399 ரூபாயும், டெல்லி-பெங்களூரு செல்ல 2,699 ரூபாயும் கட்டணமாக அறிவித்துள்ளனர்.

ஏர் ஏசியாவின் புதிய வழித்தடம்

ஏர் ஏசியாவின் புதிய வழித்தடம்

அக்டோபர் 8 முதல் ஏர் ஏசியா இந்தியா கொச்சி முதல் ஹைதராபாத் செல்லும் புதிய வழித்தடத்தைத் துவங்க உள்ளது. இந்த புதிய வழித்தடத்திற்கான கட்டணமாக 2,699 ரூபாய் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

குர்கானை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விழாக் கால சலுகையாக 888 ரூபாய் முதல் விமான பயணம் செய்யலாம் என்று அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

வழித்தடங்கள்

வழித்தடங்கள்

2016 நவம்பர் 8 முதல் 2017 ஏப்ரல் 13 வரையிலான விமான டிக்கெட்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் புக் செய்வதன் மூலம் இந்தச் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய இயலும்.

பெங்களுரு-கொச்சி , டெல்லி-டேராடூன், சென்னை பெங்களூர் செல்ல 888 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

டெல்லி-மும்பை

டெல்லி-மும்பை

மேலும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்த போது டெல்லி-மும்பை செல்ல டிசம்பர் மாத விமான கட்டணமாக இப்போது உள்ள 5,650 ரூபாய் கட்டணத்தை 2,200 அறிவித்துள்ளது. அதே நேரம் இந்தச் சலுகைகளுக்கான டிக்கெட்கள் எத்தனைக் கிடைக்கும் என்று எந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ஸ்பைஸ் ஜெட்டின் வெளிநாட்டுப் பயண சலுகைகள்

ஸ்பைஸ் ஜெட்டின் வெளிநாட்டுப் பயண சலுகைகள்

உள்நாட்டு விமான சேவைகளில் அறிவித்துள்ள சலுகைகள் போன்று சென்னை-கொழும்பு செல்ல 3,699 ரூபாய் எனப் பிற வழித்தடங்களுக்கும் பல சலுகைகளை ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

முபையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் விழாக் கால சலுகையாக ட்க்கெட் கட்டணங்கள் உட்பட எல்லாக் கட்டணங்களும் சேர்த்து 939 ரூபாய் முதல் பயணம் செவதற்கான சலுகையை அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நவம்பர் 8 முதல் பயணம் செய்யக்கூடிய ட்க்கெட் சலுகையை பெற அக்டோபர் 7 தேதி வரை புக் செய்யலாம்.

 

பயண கட்டணங்கள்

பயண கட்டணங்கள்

பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் பயணம் சேய்ய 939 ரூபாயும், அகமதாபாத்-மும்பை செல்ல 1,057 ரூபாயும், அகமதாபாத்-டெல்லி செல்ல 1,952 ரூபாயும், டெல்லி-பூனே செல்ல 3,391 ரூபாயும், கொல்கத்தா-டெல்லி செல்ல 2,504 ரூபாயும் செலுத்தி பயணம் செய்யலாம் என்று ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

உள்நாட்டு விமான பயணங்கள் அதிகரிப்பு

உள்நாட்டு விமான பயணங்கள் அதிகரிப்பு

விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் உள்நாட்டு விமான பயணங்களுக்கான டிராபிக் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ஆகஸ்ட் மாதம் வரை 83.81 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும் கூரப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+