அம்பானிக்கும் அதானிக்கும் மத்தியில் புதிய டீல்.. என்ன விஷயம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அனில் அம்பானி தலைமையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இஃப்ராஸ்டர்க்ச்சரின் மின்சார பிரிவை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவதகவும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

மகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் கர்நாடகாவிலும், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் பஞ்சாபில் 75 சதவீதம் பங்குடனும் என இரு பிரிவாக ரிலையன்ஸ் நிறுவனம் மின் விநியோகம் சேய்து வருகிறது.

100 சதவீதம் விற்பனை

100 சதவீதம் விற்பனை

ரிலையன்ஸ் நிறுவனம் இது குறித்து அறிவித்த போது ரிலையன்ஸ் இன்ஃபாராஸ்ட்ரக்ச்சரின் மின்சார விநியோகிக்கும் பிரிவின் 100 சதவீதம் பங்குகளையும் அதானி குழுமத்தின் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

2,000 கோடி

2,000 கோடி

இரண்டு நிறுவனங்களும் எவ்வளவு விலைக்கு விற்க்கப்படுகிறது வாங்கப்படுகிறது என்று எதையும் அறிவிக்கவில்லை. ஆணால் வங்கிகளின் பணப் பரிவர்த்தனையின் படி 2,000 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று கூரப்படுகிறது.

100 சதவீத தனியார் மின்சாரம் விநியோகம்
 

100 சதவீத தனியார் மின்சாரம் விநியோகம்

இந்தியாவின் முதல் 100 சதவீத தனியார் மின்சாரம் விநியோகம் செய்யும் நிறுவனமாக ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேற்கு வட்டார வழிப்படுத்தும் அமைப்புத் திட்டம் (WRSSS), பி&சி பிராஜக்ட்ஸ் என்ற பெயர்களில் மாகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் கர்நாடகாவிலும், 74 சதவீத பங்குடன் பார்பாட்டி கோலடம் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் என்ற பெயரில் ஹிமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் மாநிலங்களில் கூட்டு நிறுவனமாக இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷனுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

இந்த மூன்று மின் விநியோகம் செய்யம் பிராஜக்ட் முழுவதும் முடிவடைந்து உள்ள நிலையில் நல்ல வருவாயுடனும் இயங்கி வருகின்றன.

 

விற்பனை செய்வதற்கான காரணம்

விற்பனை செய்வதற்கான காரணம்

விற்பனை செய்வதற்கான காரணமாக முக்கியமாகக் கடனை குறைப்பது என்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்புத் துறை சார்ந்த பொருட்கள் தயாரிப்பது மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த பிரிவுகளை மட்டும் முக்கிய வாணிகமாக மாற்றிக் கொண்டு பிற வணிகங்களைக் குறைக்க ரிலையன்ஸ் இன்ஃப்ரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிமெட் வணிகம், மும்பை சாலை போக்குவரத்து மற்றும் மின்சார பிரிவு வணிகத்தில் நல்ல வளர்ச்சியுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் அறிவிப்புகள்

மேலும் அறிவிப்புகள்

சரியான ஆவணங்கள், அனுமதிகள், கட்டுப்பாடுகள் போன்றவை சரியாகச் செயல்பட்டு வரும் நிலையில் இந்தப் பரிவர்த்தனை முழுமையாக நிறைவடையும் என்றும் இதற்கான மேலும் அறிவிப்புகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆலோசகர்

நிதி ஆலோசகர்

ரிலையன்ஸ் இன்ஃபாவின் பரிவர்த்தனை உதவிக்கு எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனம் நிதி ஆலோசகராக உதவி புரிந்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க அருமையான வழி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani's RInfra sells power transmission assets to Adani for over Rs 2,000 cr

Anil Ambani's RInfra sells power transmission assets to Adani for over Rs 2,000 cr
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X