மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் சில மாதங்களுக்கு முன் தனது டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை வெற்றிகரமாக அறிமுகம் செய்தது.
ஜியோவின் வெற்றி மற்றும் லாப அளவுகளை நிலைநாட்ட இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஊழியர்களுக்கு அதிகளவிலான ஊதிய உயர்வை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ
சந்தையில் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்திற்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடுவதற்குள், ஜியோவில் இருந்து அடுத்தடுத்த உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறினர். இதில் மார்கெட்டிங் பிரிவின் தலைவரும் ஒருவர்.
இவர் மட்டும் அல்லாமல் உயர் பதவிகளில் இருந்து சுமார் 5 பேர் இக்குறைந்த காலக்கட்டத்தில் வெளியேறியதால் ஜியோ மிகப்பெரிய கலக்கத்தில் மூழ்கியது.
15% ஊதிய உயர்வு
இதன் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ தனது நிறுவனத்தில் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள டாப் பர்பாமர்களுக்கு சராசரியாக சுமார் 15 சதவீத ஊதிய உயர்வை அளித்துள்ளது.
உயர் அதிகாரிகள்
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பணியாற்றும் ஜூனியர் மற்றும் நடுநிலை மேலாளர்கள் ஆகியோருக்கு சுமார் 15 சதவீதமும், அதற்கு மேல் பதவிகளில் உள்ளவர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் ஒப்பீடு
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு கடந்த வருடத்தை விடவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு கடந்த வருடத்தை விடவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஊழியர்கள்
இதுமட்டும் அல்லாம்ல் இந்த வருடம் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது 7-12 சதவீதம் அளவிலான ஊதிய உயர்வு அளிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications