டெல்லி: விமான பயணத்திற்கான டிக்கெட் விலை குறைப்பில் 999 ரூபாய் ஆஃபருடன் இணைந்தது விஸ்த்ரா.
ஏர் ஏசியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள் எக்னாமிக் வகுப்பிற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் குறைந்தது இருக்கும் நிலையில் விஸ்த்ராவோ பிரீமியம் எக்கானமி மற்றும் பிஸ்னஸ் வகுப்பு கட்டணங்களிலும் குறைந்த பட்ச கட்டணமாக 2,999 ரூபாய் முதல் 5,999 ரூபாய் வரை ஆஃபர் அறிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி வரை இந்த விலையில் சீட்டுகளை 2016 அக்டோபர் 12 முதல் 2017 மார்ச் 28 வரையிலான பயணங்களுக்கு புக் செய்யலாம்.
999 ரூபாய்க்கான கட்டண சலுகை ஸ்ரீநகர்-ஜம்மு பாதைக்கு மட்டுமே என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி-மும்பை வழிப்பாதைக்கான டிக்கெட் கட்டணம் சாதாரன நாட்களில் 5,800 வரை இருக்கும் நிலையில் ஆஃபர் விலையில் 2,300 ரூபாய் என விஸ்த்ரா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க அருமையான வழி..!


Click it and Unblock the Notifications